வெண்மணியிலிருந்து

Author: சோலை சுந்தர பெருமாள்
Publisher: பாரதி புத்தகாலயம்
No. of pages: 144
Subject: வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹90.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
வாய்மொழி வரலாறாகப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நூல் ஏராளமான தகவல்களைக் கடந்த காலத்திலிருந்து திரட்டித்தந்துள்ளது. காவாளக்குடி சண்முகம் தொடங்கி தேவூர் தங்கராசு வரை இருபத்தொருபேரின் வாய்மொழித் தகவல்கள் இங்கே வரலாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதி மத பேதம் பார்க்காத கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் – அதனைக் கட்டியெழுப்ப – அரும்பாடுபட்டவர்கள் – அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருந்தவர்கள் என்றாலும் ஒவ்வொருவரும் தனது சாதிப் பெயரைக் குறிப்பிட்டுத்தான் வாய்மொழி வரலாற்றைத் துவக்கியிருக்கிறார்கள். 60,70 ஆண்டுகளுக்கு முன்னாள் சமூகம் இருந்த நிலையை எடுத்துச் சொல்வதென்றால் சாதியைக் குறிப்பிட்டுத்தீர வேண்டிய தேவை இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடந்த மக்களுக்கிடையேயும் பள்ளர் பறையர் என்ற பாகுபாடு இருந்ததையும், இவர்களுக்குள்ளும் தீண்டாமை நிலவியதையும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுவதால் சாதிப் பெயர் குறிப்பிடுவதும் அவசியமாகிறது. உயர் சாதிக்காரர்களின் தலைமையேற்பு ஒடுக்கப்பட்ட மக்களிம் புதுத்தெம்பை ஏற்படுத்திய தருணங்களும் இதில் பதிவாகியிருக்கின்றன. இது யதார்த்தமான கடந்த காலவரலாறு.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register