உடலுறவு : இஸ்லாமியக் கையேடு


Author: முஹம்மது இப்னு ஆதம் அல்-கவ்ஸரி
Publisher: மாற்றுப் பிரதிகள்
No. of pages:
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹120.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இணக்கமான, மகிழ்ச்சியான, நீடித்த மணவாழ்விற்கு பாலியல் ஆசைகளும் அவற்றின் நிறைவேற்றமும் இன்றியமையாதவை. எனினும், இன்றைய சமுதாயத்தில், பாலியல் எல்லைக்கோடுகள் மென்மேலும் நீட்சிசெய்யப்பட்டு, பெரும்பாலும் வெளிப்படையாகவே பாலியல் தவறுகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில், எந்தெந்த பாலியல் செயல்பாடுகள் ஷரீஆவினால் அனுமதிக்கப்பட்டவை, எவை அனுமதிக்கப்படாதவை என்பதை இனங்காணுவதன் தேவை உள்ளது. உடலுறவு: ஓர் இஸ்லாமியக் கையேடு, நுட்பவுணர்வுள்ள பாலுறவு பற்றிய ஐயங்களுக்குத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் விடையளிக்க முனைகிறது. நூலாசிரியர் அதில் கண்ணியமான மொழியைப் பயன்படுத்தியுள்ள அதேவேளை, நுட்பமான விஷயங்களைக் கலந்துரையாடுவதிலிருந்து வெட்கி ஒதுங்குவதில்லை. ஒருவர் தன் துணைவருடன் ஈடுபடும் உடலுறவுச் சந்திப்புகள் குறித்து இஸ்லாம் வழங்கும் வழிகாட்டுதலையும் துல்லியமான விவரங்களையும் அவர் ஆதாரங்களுடன் பதிவுசெய்கிறார். இந்தப் புத்தகம் விரிவான பல பிரச்சினைகளை அலசுகிறது; இதன் மூலம், பாலியல் நெருக்கம் குறித்து அடிக்கடி கேட்கப்படும் பல வினாக்களுக்குப் பதிலளிக்கிறது. இறுதியாக, முதலிரவில் புதுத் தம்பதியர் பின்பற்றவேண்டிய இஸ்லாமிய ஒழுங்குகள், பழக்கங்கள் குறித்துப் பேசும் ஒரு சிறிய பாடத்துடன் நிறைவுபெறுகிறது. š ‘இந்தப் படைப்பு நலன்பயப்பதாகவும் மிகுந்த தகவல் பொதிந்ததாகவும் இருப்பதை நான் காண்கிறேன். வருங்கால தம்பதிகள் அனைவரும் - ஏன், நிகழ்கால தம்பதிகளும்கூட, வாசிக்கவேண்டிய நூல்.’ முஃப்தி ஸுபைர் பையாத், இயக்குநர், தாருல் இஹ்ஸான் மையம், டர்பன், தென் ஆப்பிரிக்கா ‘தம்பதியர் பலரும் விழிப்புணர்வின்றி இருக்கும் முக்கியமான, நுட்பமிக்க ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும் இந்த நூல் அருமையானது; நம் வீடுகளில் இருக்கவேண்டியது.’ ஷெய்கு ஃபரஸ் ரப்பானி, தீதீதீ.ண்ஞுஞுடுஞுணூண்ஞ்தடிஞீச்ணஞிஞு.ஞிணிட் “இந்நூல் அண்மைக் காலத்தில் தோன்றிய பாலுறவு உளவியல் மருத்துவத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ஆகவே அறிஞர்கள், மருத்துவர்கள், உளவியல் பாலுறவு சுகாதார சிகிச்சையில் ஈடுபட்டுள்ளவர்கள், தம்பதியர்கள் ஆகிய அனைவருக்கும் தேவையான ஓர் அவசியமான வழிகாட்டி எனலாம்.’ டாக்டர் காலித் கஃபூர், அறுவைசிகிச்சை மருத்துவர், டாக்டர் ஸாஹித் கஃபூர், பொதுமருத்துவர்
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register