தலித்தியம்

Author: கே.பாலகோபால்
Publisher: சிந்தன்
No. of pages: 220
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹200.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
முனைவர் பாலகோபால்,… கம்யுனிஸ்ட் கட்சிகளில் உள்ள பார்ப்பனர் தலைமை பற்றியும் விமர்சிக்கின்றார். தலித் இயக்க தலைமைகளின் பலவீனங்களை எப்படி பார்ப்பது அவற்றை விமர்சிப்பது என்பதையும் விரிவாக இந்நூலில் கூறுகிறார். “ஒடுக்குமுறைக்கு ஆளாகிறவர்கள் செய்கிற தவறுகளை அவற்றுக்கான மூலங்களை கண்டறிந்து அவர்களை எப்போது ஆதரிக்கலாம், ஆதரிக்காவிட்டாலும் எப்போது அனுதாபத்துடன் பார்க்கலாம் எனும் பகுப்பாய்வு முறையை ஜனநாயக உலக கண்ணோட்டம் கற்றுகொள்ளவில்லை. கற்றுக் கொள்ள தயாராகவும் இல்லை ஒடுக்குமுறைக்கு ஆளாகும் சமூக வர்க்கத்தினரும் ஒடுக்கு முறைக்கான மூல காரணத்தை சுட்டி, தமது தவறுகளையும் பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவது என்பது எப்போது சரியாக இருக்கும், எப்பொழுது நெறியற்றதாகிவிடும் என்பதை பகுத்தாயந்து பார்க்கும் அணுகுமுறையை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பின்பற்றுவதில்லை. தலித் வர்க்கங்களிடையே மட்டுமல்லாது, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களிலும் அடிக்கடி தலைதூக்கும் போக்கு இது. இந்த பலகீனம் பற்றி பேச முடியாமல் போவதும், அதற்கொரு பெயர்வைக்க முடியாமல் போவதும் ஒருபுறம் இருக்க, அந்த பலவீனத்தையே என முன்நிறுத்தி காட்டுவதும் மறுபுறத்திலிருந்து வருகிற நெருக்கடி அந்த நெருக்கடிக்கு எந்த நிலையிலும் உட்பட் போகக் கூடாது.” என்று சாதி ஒழிப்பு இயக்கங்களும், கம்யுனிச இயக்கங்களும், ஒடுக்குமுறைக்கு ஆளாகிறவர்களும் பொறுப்புடன் சுயவிமர்சனத்துடன் இயங்க வேண்டியதன அவசியத்தை விரிவாக கூறுகிறார். இந்த நூல் முழுவது ஒருவிதத்தில் மார்க்சியத்தின் அடிநாதமான சுயவிமர்சனம் –விமர்சனத்தை இந்திய சாதி அமைப்பில் ஒவ்வொருவரும், ஒவ்வ்வொரு இயக்கமும், அரசியல் கண்ணோட்டங்களும் எப்படி பொருத்துவது என்பதை விளக்கும் நூலாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register