நீதிக்கட்சியின் தந்தை சர்.பிட்டி தியாகராயர்


Author: கி.வீரமணி
Publisher: திராவிடர் கழகம்
No. of pages:
Subject: வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹20.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
சர்.பி. தியாகராயரும் டி.எம். நாயரும் காங்கிரசுக் கட்சியில் மதிப்பும் மரியாதையும் இனி எதிர்பார்க்க முடியாது, காங்சிரசுக் கட்சியை பார்ப்பனரல்லாதார் எந்த பயனும் அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்து, பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களின் நலன்களைக் காப்பதற்கு ஒரு வழிகாண வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சர்பி. தியாகராயர் அவர்கள் 1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் சென்னை, வேப்பேரியில் எத்திராசு முதலியார் இல்லத்தில் பார்ப்பனரல்லாதார் மக்களின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடர்ந்து நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் “நீதி'' (Justice) என்ற பெயரில் ஒரு இதழையும் நடத்தினார். இந்த அமைப்பு நடத்தி வந்த "நீதி' என்ற இதழின் பெயரைக் கொண்டே, அந்த அமைப்பை நீதிக்கட்சி (Justice Party) என்ற பரவலாக அழைக்கலாயினர். சர்.பி. தியாகராயரின் அவர்களின் தன்னலமற்ற விடாமுயற்சிகள் நீதிக்கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்று 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் சிறப்பாக வெற்றி பெற்றது. அன்றைய ஆளுநர் நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய சர்.பி.தியாகராயரை அழைத்து மாகாண ஆட்சியை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், சர்.பி. தியாகராயர் முதலமைச்சர் பதவியை ஏற்க தான் விரும்பவில்லை என்று கூறி, கடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்தார். அமைச்சர் பதவி கிடைப்பதற்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராகஇருக்கும் இக்காலக்கட்டத்தையும், தகுதியும் திறமையும் இருந்தும் முதலமைச்சர் பதவி ஏற்க மறுத்த ஒருவர் நம் இனத்தில் வாழ்ந்தார் என்பது நமக்குப் பெருமையே.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register