Sale

சாணக்கிய நீதி - அரசியலும் அந்தரங்கமும்

Author: சாணக்கியர்
Translator : சந்தியா நடராஜன்
Publisher: சந்தியா
No. of pages: 136
Subject: சுயமுன்னேற்றம்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹125.00

Special Price ₹119.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இந்தியாவை உலகம் அண்ணாந்து பார்ப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட முக்கியமான காரணங்களில் ஒன்று கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம். புளூட்டோ, அரிஸ்டாட்டில், மாக்கியவல்லி ஆகியோரைவிட கெளடில்யரின் சமூக, பொருளாதார, அரசியல் தத்துவங்கள் போற்றப்படுகின்றன. கெளடில்யர் எனப்படும் சாணக்கியர் எழுதியிருக்கும் இன்னொரு நூல் "சாணக்கிய நீதி'. நூலிலிருந்து : கீழ்க்கண்ட ரகசியங்களை யாரிடமும் கூறாமல் இருப்பதே அறிவுடைமை; தான் இழந்த செல்வம், தனது தனிப்பட்ட மன வருத்தங்கள், இல்லத்தில் ஏற்பட்ட கெட்ட நிகழ்வுகள், வெறுக்கக்கூடிய ஒருவனது இழிவான பேச்சுகள், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் - இவை மறைத்து வைக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களைச் சகித்துக்கொள்; மௌனித்திரு. சத்தியம் எனது தாய்; ஞானம் எனது தந்தை; தருமம் எனது சகோதரன்; கருணை எனது தோழன்; அமைதி எனது மனைவி; மன்னித்தல் எனது மகன்; இந்த ஆறு நற்பண்புகளே எனது உறவுகள். மனைவியின் பிரிவு, நெருங்கிய உறவினரின் இகழ்ச்சி, கடன் சுமை, கொடுங்கோலனிடம் பணிபுரிதல், வறுமையில் நண்பனின் பாராமுகம் ஆகிய இவை ஐந்தும் தீயின்றியே தேகத்தைப் பொசுக்கும். பிராமணன் ஒரு விருட்சம். அது அழிவற்றது. என்றைக்குமானது. வேதங்கள் அந்த விருட்சத்தின் கிளைகள்; பிரார்த்தனைகள் அதன் வேர்கள்; மதச் சடங்குகள் அதன் இலைகள்; வேர்களின் வலிமையில் மரம் தழைத்திருக்கிறது. எனவே வேர்கள் வலுவிழந்தால் மரம் பட்டுப்போகும். எனவே வேர்கள் பாதுகாக்கப் படவேண்டும்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register