ரோசா லுக்சம்பர்க்: வாழ்வும் பணிகளும்

Author: பால் ஃப்ராலிட்ச்
Translator: என். கொற்றவை
Publisher: சிந்தன்
No. of pages: 435
Subject: வாழ்க்கை வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹350.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
அவருடைய பௌதீக உடல் எந்தவொரு சமூகப் புரட்சியிலும் இனி பங்கு பெறாது, ஆனால் எந்தவொரு சிதை நெருப்பும், சர்வாதிகார ஆணைகளும் அவரது சிந்தனைகளை அழிக்க முடியாது. அவருடைய ஆர்வலர்கள் மனதிலும், பாட்டாளி வர்க்க மக்களின் மனதிலும் அவை நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. அந்த சக்திகள், எத்தனை காலமானாலும் அதன் இறுதி வரை சென்று வரலாற்றின் போக்கைத் திருப்பிப் போடும். விதை விதைக்கப்பட்டு விட்டது, எதிர்காலத்தில் அது கனிந்தே தீரும். தெர்மிடோரில் வென்ற அவர்களின் பெயர் எவருக்கேனும் தெரியுமா? ஆனால் பாபெஃபின் சிந்தனைகள், அவருடைய மரண தண்டனைக்குப் பிறகு முப்பது வருடங்கள் கழித்து ஃபிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கத்திற்கு புரட்சிகர இயக்கத்தைக் கனியச் செய்து, ஒரு புதிய வாழ்க்கைக்குத் துணை நின்றன. இன்று சுதந்திரத்தை விரும்பும் அனைவருக்கும், கார்ல் லீப்னெஹ்ட்டின் பெயரும், ரோசா லுக்சம்பர்க்கின் பெயரும் ஒரு பெரும் அகத் தூண்டுதல், எதிர்கால மானுடவாழ்வுக்கான ஒரு நம்பிக்கை. நவீனக் காட்டுமிராண்டித்தனத்தின் வெற்றிகர முன்னேற்றம் அதன் எல்லையை அடைந்தே தீரும், அப்போது சமூக முன்னேற்றம் மற்றும் மானுட விடுதலைக்கான ஒரு இயக்கம் மீண்டும் புதிதாக தனது பாதையைத் தொடங்கும். மானுட விடுதலைக்கான அந்த இறுதிப் போரில் வெற்றியாளர்கள் ரோசா லுக்சம்பர்க் விதைத்த அந்த விதையிலிருந்து கிளம்புவர்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register