மதமும் ஜனநாயகமும்


Author: ஸயீத்
Publisher: இலக்கியச்சோலை
No. of pages: 72
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹55.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இஸ்லாத்தை நேசிக்கும் முஸ்லிம்களும், நடுநிலை சிந்தனையாளர்களும் 'இறுதி இறைத்தூதரின், உமரின் இஸ்லாத்தை' ஆட்சி பீடத்தில் அமர்த்திப் பார்க்க விரும்புகின்றனர். இதனைப் பொறுக்காத அடக்குமுறையாளர்கள் இஸ்லாத்தை 'மதம்' என்ற சிமிழுக்குள் அடைக்க முயல்கின்றனர். அந்தச் சதிவலையில் முஸ்லிம்களும் விழுந்து விடுகின்றனர். 'மேற்கத்திய இஸ்லாம்' எப்படி உலகுக்கு வெளிச்சம் பாய்ச்ச முடியும்? தீப்பந்தமாய் மாறி 'அநீதிகளை சுட்டெரிக்கும் இஸ்லாம்' எப்படி இருக்க வேண்டும் என அறிய விரும்புபவர்கள் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். அதிகாரம், பொருளாதாரம், ஆன்மீகம் - இந்த மூன்றின் ஒருங்கிணைவும் இந்த உலகத்தில் தற்போது என்ன மாதிரியான நீதியற்ற சமூக அமைப்பை உருவாக்கி வைத்துள்ளது என்பதையும், இந்த மூன்று மையங்களையும் மீளப் பெற்று இஸ்லாத்தின் வழி நின்று நீதியான சமூக அமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதையும் ஆய்வு செய்கிறது இந்தச் சிறிய நூல். 'தீனுல் ஹக்' என்ற தலைப்பிலான நீண்ட முதல் அத்தியாயத்தில் சத்திய மார்க்கம் என்பது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருந்தது என்பதை விளக்குகிறார் நூலாசிரியர் ஸயீத். தக்வா என்ற சொல்லுக்கு வழக்கில் திரிந்த நிலையில் உள்ள பொருளை கைவிட்டு, குர்ஆன், ஹதீஸ் ஒளியில் மறுவாசிப்பு செய்திருக்கிறார் நூலாசிரியர். நிராகரிப்பாளர்கள் என்ற சொல் இறைவனை மறுத்தவர்களை மட்டுமல்ல, குறுக்கு வழியில் ஆன்மீக திருப்தியை நாடுபவர்களையும் குறிக்கிறது என்கிறார் ஸயீத். நமது தலைமுறையில் தலையாய பிரச்சினையாக இருப்பது ஒழுக்க வீழ்ச்சிதான் என்பதை சுட்டிக்காட்டுவதுடன், அதனை சீர்செய்ய தனிமனித சீர்திருத்தம் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு சமூக புனரமைப்பும் அவசியம் என்கிறார் நூலாசிரியர். ஆனால் நிலைமை இப்போது அப்படி இல்லை என கவலை கொள்வதுடன், இதற்கான தீர்வாக இருக்க வேண்டிய இஸ்லாம் தற்போது லட்சியம் இல்லாததாக ஆகி விட்டது என்றும் வருந்துகிறார். பொருளாதார நீதி குறித்து விரிவாக பேசும் அத்தியாயத்தில், இஸ்லாம் காட்டித் தந்த பொருளியல் சித்தாந்தங்கள் தனி மனிதனுடன் சுருக்கப்பட்டதை சூழ்ச்சி என்பதுடன், ரோமும் பாரசீகமும் வெற்றி கொள்ளப்படும் என்ற சுபச் செய்தி பொருளாதார புரட்சி பற்றிய முன்னறிவிப்பு அல்லாமல் வேறு என்ன என கேள்வியெழுப்புகிறார்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register