Sale

பறக்கும் ஹேர் க்ளிப்

Author: விஜயபாஸ்கர் விஜய்
Publisher: வானம்
No. of pages:
Subject: குழந்தை இலக்கியம்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹50.00

Special Price ₹47.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதை, பாகுபாடு. தன் குழந்தைக்கு இட்லி ஊட்டுகிறார் ஓர் அப்பா. இடையிடையே தண்ணீர் கேட்கிறாள் மகள். அதை மையமாக வைத்தே அம்பேத்கர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லத் தொடங்குகிறார். ஆனால், அதை, மகள் புரிந்துகொள்ளும்விதமாக வகுப்பில் நடப்பதாக ஒரு சம்பவத்தைச் சொல்லி, மனிதர்களுக்குள் பாகுபாடு பார்க்கப்படுவதை மகளின் வாயிலிருந்து வருவதைப்போல அந்தச் சூழலை மிக அழகாக நகர்த்திச் செல்கிறார். 'Discrimination' எனும் சொல், இனி அந்தச் சிறுமிக்கு வெறும் வார்த்தையாக இருக்காது. அதன் பொருளைப் புரிந்தவளாக உச்சரிப்பாள். இந்த மாற்றத்தை இட்லி ஊட்டும் கால இடைவெளியில் செய்துவிட முடியும் எனப் பெற்றோர்களுக்குக் கற்றுத்தருகிறார் எழுத்தாளர். இதுதான் நூலில் மைய விஷயம். இதுபோல இப்புத்தகத்தில் பத்துக் கதைகள், எளிமையும் நேர்த்தியும் கொண்டவையாக உள்ளன. எவ்வளவு சிரமமான விஷயத்தையும் குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் சொல்லி விட முடியும். அதற்கு, பெற்றோர்கள் அந்த விஷயம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டிருப்பதோடு, சுவையோடு சொல்வதற்கும் தயாராக வேண்டும். நான் 'ரெடி' என்பவர்களின் கரம்பிடித்துக் கற்றுத்தரக் காத்திருக்கிறது இந்த நூல். (விகடன்)
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register