சர் ஏ.டி.பன்னீர் செல்வம்


Author: கி.வீரமணி
Publisher: திராவிடர் கழகம்
No. of pages: 40
Subject: வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹20.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
." என் தோளுக்கு இட்ட மாலையைத் தலைவர் தாளுக்குச் சூட்டுகிறேன் ". சர் ஏ.டி.பன்னீர் செல்வம். இந்தி எதிர்ப்புப் போரில் கைதாகிப் பெல்லாரி சிறையில் பெரியார் இருந்தபோது ,1938 இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டுக்கு பெரியார் தலைமை வகிக்கவேண்டும். ஆனால் அவரை அரசாங்கம் விடுதலை செய்யாததால் அவர் தலைலை உரையைப் பன்னீர் செல்வம் படித்தார். " என் தோளுக்கு இட்ட மாலையைத் தலைவர் தாளுக்குச் சூட்டுகிறேன் " என்று அவர் பெரியார் படத்துக்கு மாலையணிவித்து மாநாட்டை நடத்தினார் ! அவரை பற்றி பெரியாரின் வார்த்தைகள் : என் மனைவி முடிவெய்திய போதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை. ஒரு சொட்டுக்கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்த போதும் இயற்கைதானே 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா? இது பேராசையல்லவா என்று கருதினேன். பத்து வயதிலேயே லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்த ஒரே அண்ணனின் மகன் படித்து விட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக இருபதாவது வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை. கதறவில்லை. பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகின்றது. தமிழர்களைக் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கிறது. காரணம் முன் சொல்லப்பட்ட மனைவி, தாயார், குழந்தை ஆகியவற்கள் மறைவு என் தனிபட்ட சுகத்துக்கத்தை பொறுத்தது. தன்னலம் மறையும் போது அவர்களது மறைவின் நினைவும் மறந்து போகும். பன்னிர் செல்வத்தின் மறைவு பொதுநலத்தை பொறுத்தது. எனவே தமிழர்களைக் காணுந்தோறும் நினைக்குந்தோறும் பன்னீர் செல்வம் நியாபகம் வருகின்றார்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register