ஊழல் - உளவு - அரசியல்

Author: சவுக்கு சங்கர்
Publisher: கிழக்கு பதிப்பகம்
No. of pages: 223
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹200.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இப்புத்தகம் சங்கர் என்ற தனி மனிதனின் வாழ்வை ஒரு நிகழ்வு எப்படிப் புரட்டிப்போடுகிறது என்பதை விவரிக்கும் ஒரு சுயசரிதையா? ஆமாம். அப்படித்தான் இப்புத்தகம் தொடங்குகிறது. ஆனால் இப்புத்தகம் அது மட்டுமே அல்ல. அதையும் தாண்டி காவல்துறை, அரசு இயந்திரம், சிறைத்துறை, நீதித்துறை என பல பரிமாணங்களை உள்ளடக்கியது இப்புத்தகம். சங்கரின் வாழ்க்கை சிறுவயதில் இருந்தே புறக்காரணிகள் தான் தீர்மானிக்கின்றன என்பதை இப்புத்தகம் உணர்த்துகிறது. அரசு அலுவலகங்கள், நேர்மையும், நேர்மையின்மையும் இணைந்து ஓடும் அரசு எனும் இயந்திரம், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, ஒரு ஊழல்.. வழக்காகப் பதியப்படுவது முதல் குற்றப்பத்திரிக்கைகள் உருவாகும் விதம், அவ்வழக்குகள் கையாளப்படும் முறை எப்படி தமிழக அரசியலை 20 வருடங்களுக்கும் மேலாக பாதிக்கிறது என்பது வரை இப்புத்தகம் தெள்ளத்தெளிவான ஒரு சாட்சியாக, அதுவும் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறையில் பணியாற்றிய சங்கராலேயே எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல.. மனித உரிமை மீறல்கள், சிறைகள், சிறையில் ஏற்படும் அனுபவங்கள், நீதிமன்ற நடைமுறைகள் என பல அடுக்குகளைக் கொண்டுள்ளது இப்புத்தகம். அத்துமீறும் அதிகாரிகளின் செயல்பாடுகள் மட்டுமல்ல, சில நேர்மையான அதிகாரிகளால் ஏற்படும் நெகிழ்வுகளையும் உள்ளடக்கியது இப்புத்தகம். சங்கர் மட்டுமல்ல, அவரது தாயாரின் மனதையும், உடல்நிலையையும் பாதித்த வழக்கைத் தான் எதிர்கொண்ட விதத்தை சங்கர் விவரிக்கும்போது காவல்துறை, விசாரணை ஆணையம் முதல் சிறைகள், நீதிமன்றங்கள் வரை நமது நாட்டில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விவரிக்கும் ஆவணமாகவும் இப்புத்தகம் இருக்கும்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register