நிராசைகளின் ஆதித் தாய்


Author: தேன்மொழி தாஸ்
Publisher: உயிர்மை பதிப்பகம்
No. of pages:
Subject: கவிதைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹50.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
அவனது உறைவிடத்தின் மேல் எனது சாபம் விழத்துவங்கியது அவனது நாவுமரம் பல விசித்திரப் பூ பூக்கும் அவனது வேரின் விஷம் அறிந்தவர்களையும் எனக்குத் தெரியும் மணலின் மீது நடக்கையில் விழும் பள்ளம் அவனுக்குக் காதல் காற்றடிக்கும் திசை அத்தனையிலும் காதலிகள் காதலிகளோடு இருப்பதும் காதலிகளால் வாழ்வதும் உபாயக் காரனின் உன்னத சூத்திரம் உறக்கப் பேசும் அவனுக்கு உண்மையாய் சொல்ல ஒரு வார்த்தையும் கிடைக்காமல் போவது அவனது நாடக வாழ்வின் சாமர்த்தியம் எனது எளிமை அவனது தந்திரங்களை ஒரு சிறு மிளகின் இருட்டில் அடைத்து அபத்தமாக்குகிறது அம் மிளகு அவன் ஒரு மகாப் பெரும் மூடன் என்றும் சமுதாயத்தை சத்தமிட்டு ஏமாற்றுபவன் என்றும் சொல்கிறது அயோக்கியர்களின் கொடி அழகாகத்தான் பறக்கும் ஏனெனில் காற்று அப்படிப்பட்டது சரியான நேரத்தில் அக்கொடிதனை கிழிக்கும் காலத்தின் மீது எனது இதயத்தின் மகா தமணியை விடுகிறேன் எனது நம்பிக்கையை துரோகத்திற்கு பின் ஒரு கடுகு ரோஹிணி வேருக்கடியில் புதைத்தேன் பூத்தது காதலை புதைக்க வேண்டும் என்ற அபிப்ராயம் கூட இல்லை காதல் என்ற அப்படி ஒன்று இல்லை பெண்களைப் பயன்படுத்த ஆண்களின் கண்களிலிருந்து ஒழுகும் காமச் சுனை ஆண் அழுக்குகளை மறைக்க பெண்ணின் வெண்மையை தேர்ந்தெடுக்கிறான்
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register