நினைவுகள் அழிவதில்லை


Author: நிரஞ்சனா
Publisher: சிந்தன் புக்ஸ்
No. of pages: 340
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹140.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இந்தியாவின் “தாய்” நாவல்----நினைவுகள் அழிவதில்லை. இந்திய சாதி, நிலவுடமை சமூகம்(Feudalism) எவ்வளவு கொடுமையானது என்பதையும், அதை எதிர்த்து மக்கள் எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதும் தான் நினைவுகள் அழிவதில்லை சொல்லும் காவிய கதை. அடக்குமுறைகளை எப்படியெல்லாம் மக்கள் ஒன்றினைந்து அடித்து நொருக்கினார்கள் என்பது இந்த நாவலின் ஒவ்வொரு வரியிலும் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் பிரிட்டிஸ் அரசாக இருந்தாலும், சுதந்திர(?) இந்திய அரசாக இருந்தாலும் அது ஆதிக்க சக்திகளுக்கு தான் துணைபோகும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரே வழி ஒன்றினைந்து போராடுவது தான் என்பதை வரலாறாக எடுத்துரைக்கிறது இந்த நாவல். செங்கொடி உயர்த்(திய)தும் தோழர்களின் கனவுகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இம்மண்ணின் உயிர்நாடியான போராட்டம், உழைக்கும் மக்களின் வறுமையையும், ஏமாற்றத்தையும்,போலி ஜனநாயகத்தையும் கோட்டைக் கதவுகளை உடைத்துத்தள்ளி பாட்டாளி வர்க்கச் “செங்கொடியை” உயரப் பறக்க விடும் என்று கனவு காண்கிறது. இந்த கனவு உன்னதமானவர்களின் கண்ணீர்த்துளிகளால் நாளும் புத்துயிர்பெறுகிறது. இந்த நாவல் ஒரு நினைவிடம். ஆம்! அப்பு, சிருகண்டன், அபுபக்கர் மற்றும் குஞ்சம்பு ஆகியோரின் தியாக நினைவிடம் தான் இந்த நினைவுகள் அழிவதில்லை . விவசாயப் பெருமக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளையும், போரட்ட உணர்வுகளையும் யதார்த்தபுர்வமாகவும், கலை அம்சத்தோடும் சித்தரிக்கும் இந்த நாவல் இந்தியாவில் ஓரு மிகச் சிறந்த நாவல். உண்மை சம்பவம் என்றும் நினைவில் அழியாதவை.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register