நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும்


Author: உ.வே. சாமிநாதையர்
Publisher: அடையாளம் பதிப்பகம்
No. of pages:
Subject: நிகழ்வுகள்
Language: தமிழ்

Availability: In stock

₹90.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் எழுதிய ‘நான் கண்டதும் கேட்டதும்’, ‘பழையதும் புதியதும்’ ஆகிய இரு நூல்களும் ஒரே நூலாகியிருக்கும் இந்தப் பதிப்பை ஒரு நினைவோடை எனலாம். *** நினைவோடை, ஒருவரின் நினைவுகளின் தொகுப்பு. எழுதுபவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த தனிப்பட்ட அல்லது பொது நிகழ்வுகளையோ தருணங்களையோ அது நினைவுபடுத்துகிறது. இதனால்தான் அந்தப் பிரதியில் கூறப்படும் வாக்குகள் அனைத்தும் அவருடைய உண்மைகளாகக் கருதப்படுகின்றன. இந்த நூலில் உவேசா தாம் கண்டதையும் கேட்டதையும் பழையதும் புதியதுமாக 32 கட்டுரைகள் மூலம் தம்முடைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அத்துடன் நமக்குச் சொந்தமில்லாத ஓர் அனுபவத்திற்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் அடியெடுத்து வைப்பதற்கு நம்மை அழைக்கிறார்; மேலும் நமக்கு அப்பாற்பட்ட விஷயத்தோடு நம்மை அதனுடன் தொடர்புபடுத்தும் ஆற்றல் பற்றியும் நினைவுபடுத்துகிறார். இதற்காக ஆய்வு, தேடல், வரலாறு எனத் தொடங்கி சந்திப்புகள், சம்பவங்கள், பயணங்கள் எனப் பல நிகழ்வுகள் வழியாக நம்மை விரைந்து அழைத்துச் செல்கிறது அவருடைய நடை. இதனால்தான் இந்நூல் ‘ஒரு வாழ்க்கையின் கதையைக் கூறும் தன்வரலாறு’ என்பதைக் காட்டிலும் ‘ஒரு வாழ்க்கையிலிருந்து கதையைக் கூறும் நினைவோடை’ என்னும் வரலாறாகத் தன் வித்தியாசத்தைப் பெற்றுக்கொள்கிறது. இதன்மூலம் நமக்கு ஓர் அகவெளிச்சமூட்டும் பரந்த பார்வைக்கான ஜன்னலைத் திறக்கிறது இந்நூல். இதுவே இந்நூலை வாசிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register