மேய்ச்சல் மைதானம்


Author: பாலகுமாரன்
Publisher: திருமகள் நிலையம்
No. of pages: 312
Subject: நாவல்கள்
Language: தமிழ்

Availability: In stock

₹185.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
மேய்ச்சல் மைதானம் நூலில் இருந்து... By Thayalan Balasuntharam வீடு சிக்கலாகும்போது வெளியே வாழ்க்கை வெற்றி தராது. வீடு என்பது விடுதலையான இடம். விடுதலையை, நிம்மதியை உணரவேண்டிய இடம் போராட்டமாக வெளியுலகில் தவறுகள் நேருகின்றன. இதனின்றும் மீட்சி எப்படி? பதினைந்து வயதில் வீடு விட்டு நகர்வது பிள்ளைக்கு நல்லது. வாழ்க்கை முறையை இந்திய-குடும்ப வாழ்க்கை முறையை கொஞ்சம் மாற்றிக் கொள்வது நல்லது. இரண்டு வெவ்வேறு விதப் பெண் உணர்வுகளுக்கிடையே சிக்காது தாய் என்பவளிடம் இருந்து விலகி நிற்பது நல்லது. சுயபலம் அதிகரித்துக் கொள்வதும் தனியே தன் வழியைத் தானே தெரிந்து கொள்வதும் பிற்காலத்தின் தெளிவுக்கு விரைவில் உதவும். துணை என்று வந்தவளை முற்றிலுமாய் மதிக்க-உணர-விலகல் உதவி செய்யும். அம்மா பாவமில்லையா? அம்மா ஒரு மனைவி. அவளுக்கு புருஷன் வழிகாட்டி. கடைசி வரை பாதுகாப்பு. உறுதுணை. பிள்ளை கரத்தை இறுகப் பற்றிக் கொள்வது, புருஷனை அவமதிக்கும் செயல். ஒரு சின்னப் பொறாமைக்கு இடமளிக்கும் சூழல்.புருஷனை புறக்கணிக்கிற வித்தை! நல்ல மனைவி தள்ளாடும் வயதில் பிள்ளையை மட்டுமே போற்ற மாட்டாள். இதே பிள்ளைக்கும் உணர்த்தப்பட வேண்டும். குழந்தைகளை நம்பி வாழ வேண்டாம். கடைசி வரை வந்த பெண்ணுக்கு துணையாய் இருத்தல் வேண்டும். மனைவி முக்கியம். பிறகு குழந்தைகள். புருஷன் முக்கியம். பிறகே பிள்ளைகள். பேணி வளர்த்துச் சான்றோனாக்குதல் நம் கடன், கடமை. கடமை முடிந்து ஓய்வு பெறுங்கள். ரிடையரான பிறகு ஆபிஸ் பற்றி என்ன கவலை. அதேபோல் பிள்ளை காலூன்றி நின்ற பிறகு அவன் குடும்பம் பற்றி என்ன அக்கறை? அது அவன் சுமை. விலகியிருக்க இன்றே கற்றுக் கொள்ளுங்கள். விட்டு ஓடச் சொல்லவில்லை. விலகி நில்லுங்கள். வெய்யிலில் பெற்றோரைத் தள்ளச்சொல்லவில்லை. நிழல் கொடுத்து ஓய்வெடுக்கச் சொல்லுங்கள். நிகழ்ந்தவற்றை உட்கார்ந்து அசைபோடச் சொல்லுங்கள். வியந்து வியந்து பேசச் சொல்லுங்கள். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே நடக்கும் பெரும் மாற்றங்களை உணரச் சொல்லுங்கள். என் வாழ்க்கை, என் பலத்தில், என் சிந்தனையில் நடக்கட்டும். என் வளர்ச்சிக்கு என் துணைவி உதவி செய்யட்டும். வளர்ச்சியை வேடிக்கை பார்க்கச் சொல்லுங்கள். வளர்த்த பின் நீங்கள் வளர்த்ததை வேடிக்கை பாருங்கள். நாலு பக்கமும் பாசவலை விரித்துச் சிக்கி விழிப்பதை விட, பிணைத்து கொண்ட ஒன்றோடு ஒற்றுமையாய் ஓட முன்னேற்றம் இயல்பாகும்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register