லோகி


Author: ஜெய மோகன்
Publisher: உயிர்மை பதிப்பகம்
No. of pages:
Subject: சினிமா
Language: தமிழ்

Availability: In stock

₹75.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
லோகி என்ற ஒற்றை மனிதனுடனான ஜெயமோகனின் நினைவுகளும், அவர் கதை திரைக்கதை எழுதிய, இயக்கிய திரைப்படங்களைப் பற்றிய மதிப்பீடுகளுமே இந்தப் புத்தகத்தின் பேசுபொருள். ஆனால் அதனூடே ஜெயமோகனின் நினைவலைகளில் தேங்கி நிற்கும் காலத்தின் நிழலான சில படங்களைப் பற்றி அட்டகாசமான அறிமுகங்களை கொடுக்கிறார். அவை வழக்கம்போலான வீக்கிபீடியா தகவல்களாய் மட்டும் நில்லாது அந்தக் கதைகளின் தனித்தன்மைகளையும், அதன் படைப்பாளிகள் மலையாள சினிமாவின் ரசனையை யதார்த்தபாணி நடிப்பில் தொடங்கி களம், காலம், உருவாக்கம் என எப்படி படிப்படியாய் வார்த்தெடுத்தார்கள் என்பதையும், அவர்களின் கதைக்கரு எங்கிருந்து எடுக்கப்படுகிறது? அதன் திரைக்கதைகள் எதன் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது? நினைவில் மறவா கதாபாத்திரங்கள் எப்படி உருவாயின என பல விடயங்களை எளிமையாய் விவரிக்கிறார். முதல் தர திரைக்கதை எழுத்தாளரான லோகியே இயக்கம் என்றும் வரும் பொழுது இரண்டாம் தர இயக்குனரானதில் உருவாக்கம் சார்ந்த தொழிட்நுட்பங்கள் பற்றியும் லேசாய் சொல்லிச்செல்கிறார். இவை எதுவும் அந்தப் படங்களுக்கென்று தனிக்கட்டுரைகளாய் அமையாது லோகியைப் பற்றிப் பேசும்போதே போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. அந்தந்த காலங்களின் மாற்றங்களில் படைப்பாளிகளின் திரைப்படங்களின் தனித்தன்மையை பேசினாலும் அதன் பகுப்பாய்வுகளுக்குள்ளும் செல்லாது ஆனால் அதை பார்த்தே ஆகவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டுச்செல்லும் வகையில் அறிமுகமே தருவதே இப்புத்தகத்தின் ஸ்பெஷல். சினிமாக்களைத் தேடி அலையும் ஒருவனுக்கு இப்படி பேச்சின் இடையில் அறிமுகப்படுத்தப்படும் படங்கள் அதிகம் கவனத்தில் நிற்கும். அதன் பெயர் அவனை விட்டு நீங்காது. அப்படி என்ன ஸ்பெஷல் அது என்று மனம் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்தக் கேள்வி அவனை உறங்கவிடாது எப்படியேனும் அந்தப் படத்தைப் பார்க்கும் நகர்வினை தொடக்கிவிடும். அந்தக் கேள்வியை எழுப்புதலில் முக்கியமாகிறது இந்த புத்தகத்தின் பங்கு.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register