குலேபகாவலி


Author: ஆத்மார்த்தி
Publisher: யாவரும் பதிப்பகம்
Language: தமிழ்

Availability: In stock

₹120.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
ஆத்மார்த்தியின் சிறுகதைகள் நோக்கமற்ற நோக்கங்களைத் தனதுள்ளே கொண்டிருப்பவை.இந்தத் தொகுதியின் கதைகள் வாசகனின் மனக்குளத்தில் நெடிய ஆலவட்டங்களை மட்டுமல்லாது சின்னஞ்சிறிய சலனங்களையும் சேர்த்தே நிகழ்த்தித் தருபவை.தென்னம்பாளை அந்திமழையிலும் இடம் கணையாழியிலும் வெளியான கதைகள்.டெல்லிவாலா மற்றும் மை இரண்டும் ஜன்னல் இதழில் இடம்பெற்றவை.இன்னொரு நந்தினி பெங்களூர்க்காரி இரண்டு கதைகளும் ஆனந்தவிகடனில் வந்தவை என்பது அவற்றின் சிறப்பு.தொட்டி மீன்கள் இணையத்திலும் இரண்டு மைதிலிகள் உயிர்மையிலும் வெளியாகின.இந்தக் கதைகள் முன் வைக்கிற மனிதர்களை ஐயமும் திரிபும் இன்றி ஏற்றுக் கொள்ள முடிவது ஆத்மார்த்தியின் எளிய கதாமொழியின் பலம்.மனதுக்குப் பிடித்தவற்றில் கதைகள் இடம்பெறுவது எளிது போலத் தோற்றம் தந்தாலும் அரிது என்பதே மெய்.குலேபகாவலி என்ற தலைப்புக்கதை ஃபெமினா இதழில் வெளியானது.இந்தக் கதை ஒரு ஞாபக காலத்துக் கார்த்திகை தீபத்தின் மறக்கமுடியாத காதல் தெறலாக மனசுக்குள் அமர்ந்துகொள்கிறது. வாசிப்பால் மாத்திரமே மலர்த்த வல்ல மலையுச்சி மலர் போல அது சாலச்சுகம்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register