குடியேற்றம்


Author: தோப்பில் முஹம்மது மீரான்
Publisher: காலச்சுவடு
No. of pages: 237
Subject: நாவல்கள்
Language: தமிழ்

Availability: In stock

₹275.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
தோப்பில் மீரானின் புதிய நாவல். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்த மரைக்காயர்களுக்கும் தங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவ முயன்ற பறங்கிகளுக்கும் இடையே முடிவற்ற நிலையில் போர் மூண்டது. வணிக மேலாதிக்கத்தையும் கடல்வழி ஆதிக்கத்தையும் மரைக்காயர்களிடமிருந்து பறித்தெடுக்க முயன்றனர் பறங்கிகள். மரைக்காயர்களின் உரிமைப்போர் வீரஞ்செறிந்தும் அற்புதங்களால் நிரம்பியும் இருந்தது. சமயத்தின் பீடத்தில் அன்று பெரும் அங்கமாக இருந்தவர்கள் இன்றும் அப்படி இருக்க முடிகிறதா? சமயத்தின் ஆட்சி என்பதாக நாம் புரிந்துகொள்வது எது? இவற்றின் முரண்களைத் தன் அழகியலால் உந்தித் தள்ளிக்கொண்டு வருகிறார் தோப்பில். வரலாற்றுக்கும் புனைவுக்குமான இணைப்புப் பாலம் இக் ‘குடியேற்றம்.’ - களந்தை பீர்முகம்மது ஆசிரியரின் ஆறாவது நாவலிது. கிழக்கு-மேற்கு கடற்கரைகளில் பரங்கியர்களுக்கும் கடலோர மரைக்காயர்களுக்கும் இடையே 150 ஆண்டுகள் கடும்போர் நடைபெற்றது. இந்தப் பின்னனியில் "குடியேற்றம்" எழுதப்பட்டுள்ளது. தோப்பிலாரின் நாவல்களுக்கேயுரிய வரலாற்றுத் தரவுகள், மொழிநடை, காட்சி ரூப உருவாக்கம் ஆகியவை இந்நாவலிலும் உள்ளன. நாவலின் பலமாக இவையிருந்து குன்றாத வாசிப்புச் சுவையை ஊட்டுகின்றன.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register