கோளாறு எங்கே


Author: யூசுப் அல் கர்ளாவி
Publisher: இலக்கியச்சோலை
No. of pages: 128
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹100.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
வெற்றி தாமதமாவதின் காரணத்தை அடையாளம் காட்டும் கண்ணாடி ஒட்டமொத்த முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பாடுபடுவதாக சொல்லிக் கொண்டாலும், தான் சார்ந்திருக்கும் இயக்கத்தில் உறுப்பினராக இல்லாதவரை, முஸ்லிமாகவே கருதாத கடும் போக்கு சில இயக்கத்தினரிடம் இன்றும் நிலவுகிறது. இந்த அபாயகரமான நிலை சர்வதேச அளவிலும் உள்ளது. கண்ணியம் இழந்த சமூகத்தின் மேன்மையை, இயக்கங்கள் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கும் போது, மேற்சொன்ன தவறுகள் நிகழ்வதால் இஸ்லாமிய எழுச்சியும் தள்ளிப் போகிறது. இயக்கங்கள் மீதான நம்பிக்கையும் தகர்ந்து போகிறது. கிலாஃபத் வீழ்ந்து ஒரு நூற்றாண்டு முடியப் போகிறது. எத்தனை இயக்கங்கள், எவ்வளவு முயற்சிகள், ஆனாலும் இலக்கை எட்ட முடியவில்லையே... இதற்காக உண்மையில் ஆதங்கப்படும், கவலைப்படும் இயக்கவாதிகள் அவசியம் 'கற்க' வேண்டிய நூல் 'கோளாறு எங்கே?'. யாரிடம் கோளாறு இருக்கிறது என்பதை திட்டவட்டமாக கூறுவதிலிருந்து தவிர்ந்து கொண்ட நூலாசிரியர், இஸ்லாமிய இயக்கங்களை முழுமையாக, அதன் வெளி வட்டத்தில் நின்று விமர்சனம் செய்கிறார். இந்த விமர்சனம், முஸ்லிம் சமூகத்தின் சாதாரண பிரஜை ஒருவர் ஆற்றாமையால் குறை கூறுவதைப் போன்ற ஒன்று அல்ல. அது மாதிரியான நம்பிக்கை இழந்த சொற்களை இயக்கவாதிகள் நிறைய கேட்டிருக்கலாம். இயலாமைகளின் கூற்றாக கருதாமல், யூசுஃப் அல் ககர்ளாவியின் கருத்துக்களை திறந்த மனத்துடன் இயக்கவாதிகள் அணுக வேண்டும். மொத்தத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இயக்கவாதிகளும், அவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் புலம்பும் சமூக ஆர்வலர்களும் காய்தல் உவத்தலின்றி கற்க வேண்டிய நூல் இது. நன்றி : புதிய விடியல்
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register