கோயிற்பூனைகள்


Author: கோவைகிழார்
Publisher: திராவிடர் கழகம்
No. of pages: 140
Subject: சட்டம்
Language: தமிழ்

Availability: In stock

₹40.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
திருக்குணவாயிற் கோயிலில் ஒரு பெருந்திருட்டுப் போயிற்று. கோயில் அதிகாரிகள் பெருந் திருவிழாவிற்காக நகைகளை எடுக்க ஸ்ரீ பண்டாரத்தைத் திறந்தார்கள். விலையுயர்ந்த நகைகளைக் காணவில்லை. இவைகள் பத்து ஆண்டுகளுக்கு முந்தித்தான் பூண்டிச் ஜமீந்தாரராலும், ப.ழ.பெ.ந. இராமன் செட்டியாராலும் செய்துத் தரப்பட்டன. இக்களவு உடனே போலீசுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. போலீசார் இரண்டு மாதம் வரை துப்பு ஆராய்ந்தார்கள். இறுதியில் ஒரு பழைய திருடன் வீட்டைச் சோதனை போட்டதில் ஒரு சில கோயில் நகைகள் கிடைத்தன. அவனை அடித்து நொறுக்கியதில் அவை பொன்னப்பா பத்தர் மூலமாகத் தனக்குக் கிடைத்தன என்று சொல்லிவிட்டான். பொன்னப்பா பத்தரைச் சிறைசெய்து விசாரித்ததில், வைத்தியநாத கனபாடிகள் சில தங்க நகைகளைத் தந்து உருக்கச் சொல்லிக் கைவளையல்களாக்கிக் கொண்டு போனார் என்று சொன்னார். மறுபடி இதே துறையில் போலீசார் துப்பு விசாரிக்கையில் திருப்பனைத்துறை மடத்தார் வைத்து நடத்தும் அன்னதானக் கட்டளைக் கணக்குப் பிள்ளை சொக்கப்பா பிள்ளையும், வைத்திய நாத கனபாடிகளும், பொன்னப்பா பத்தரும் சேர்ந்து இக்களவைச் செய்திருக்க வேண்டும் என்று போலீசார் முடிவுக்கு வந்தார்கள். போதுமான சான்றுகள் கிடைக்காததனால், பொன்னப்பா பத்தரை விட்டு விடுவதாக ஆசை காட்டினதில் அவன் சர்க்கார்ச் சாட்சியாக வருவதற்கு இசைந்தான். ஆகவே, சொக்கப்பா பிள்ளை யையும் வைத்தியநாத கனபாடி களையும் குற்றவாளிகளாகச் சேர்த்து குற்ற வழக்குத் தொடங்கினார்கள். இதில் சொக்கப்பாவுக்கு ஓர் ஆயுளும், கனாபடிகளுக்கு (பார்ப்பனர்களுக்கு) 9 மாதச் சிறையும் அளிக்கப்பட்டது. (கோவூர் கிழார் எழுதிய கோயிற்பூனைகள்) ஹிந்து அறநிலையத் துறை கமிஷனராக இருந்த கோவைகிழார் என்று பலராலும் அழைக்கப்பட்ட, சி.எம்.இராமச்சந்திரனார் அவர்கள் கோயிற்பூனைகள் என்ற பெயரில் வெகுகாலம் முன்பு தினமணி வெளியீடாக எழுதியதில், இத்தகைய பல்வேறு சுரண்டல்கள், பகற்கொள்ளை, திருட்டுகள் பற்றியும் எழுதியுள்ளார்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register