கேவல் நதி


Author: யாழி
Publisher: உயிர்மை பதிப்பகம்
No. of pages:
Subject: கவிதைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹60.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
கவிஞர் யாழி எழுதிய கேவல் நதி என்ற கவிதை தொகுப்பு அழகியலின் 53 அம்சங்களையும் தலைப்பாக கொண்டு வந்துள்ளது. கேவல் நதி என்பது அழுகையின் தொடர்ச்சி எனக் கருதும் ஆசிரியர் விரக்தி, இறுக்கம், வேதனை, துக்கம், அழுகை, பகட்டு,வெறுமை, புலம்பல் என மனித மனக்கண்ணாடியில் அத்துணை உணர்வுகளையும் பிம்பங்களாக பிரதிபலித்துள்ளார்.பெரும் வரம் வேண்டிகடும் தவம் புரிவதாய் எண்ணிஒற்றைக்காலை வெட்டிக்கொண்டதுகடினமாய் தானிருக்கிறதுகடவுள் தோன்றும் பட்சத்தில் இன்னொரு காலை வரமெனக்கேட்டாலேபோதுமானதாய் இருக்கும்இவ்வாழ்வில் என்ற வரிகளில் எதையும் திருந்தச்செய்யாதவர் எண்ணி வருந்தும் நிலையையே அடைவர் என்கிறார் கவிஞர்.ஒரு அனாதை பிணத்திற்கு கண்ணீர்த் துளியை அஞ்சலியாக்கிய அந்த நந்தவனத்து ஆண்டியின் மனிதாபிமானத்தை நயம்படத் தெரிவிக்கும் வித்தை அபாரம். வலுமறந்த கைகள் கபாலம் அதிர / ஓடிக்கொண்டிருக்கிறது /தொடர்வண்டி / அபாயச்சங்கிலியை இழுத்து நிறுத்தும் / வலுவுள்ள அந்தக்கைகள் / தேடுவதென்னவோ / ஆலய மணியின் கயிறை,ஆன்மீகத்தின் விஞ்ஞானப்பூர்வமற்ற நம்பிக்கையை இக்கவிதையில் விளாசுகிறார் கவிஞர்.தொட்டிக்குப் பழக்கப்பட்ட மீன்கடலுக்குள் தேடுகிறதுசெவ்வகத்தை. என்ற ஐக்கூ வடிவத்தையும் இவர் விட்டுவைக்கவில்லை.யதார்த்தங்களின் பிரதிபலிப்பு சித்தம் பிறழச்செய்து தன்னை இயக்கிக்கொண்டிருப்பதாக என்னுரையில் வாக்கு மூலம் கொடுக்கும் யாழி,மனித உணர்வின் பிரதானமான ரௌத்திரத்தையும் இந்தப் படைப்பில் பறைசாற்றியிருக்கலாம். நாகை நல்லூரைச் சேர்ந்த இவரின் நான்காவது தொகுப்பே இந்தக் கேவல் நதி. உயிர்மை பதிப்பகம் வெளியீட்டில் வந்துள்ளது. கவிதை வாசிப்பவரை ஒரு மாணவனைப்போல் அடுத்த தளத்திற்கு நகர்த்தும் ஆசிரியர் மனோபாவத்தோடு இயங்கி இருக்கிறார்.மனிதநோய்க்கு மருந்து வழங்கும் பணியை மேற்கொள்ளும் யாழியின் வருங்கால படைப்புகள் சமூகப்பிணிக்கு மருந்தாக அமையவேண்டும் என்பதே என்போன்றோர்ஆசை.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register