காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை


Author: அருந்ததி ராய்
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
Language: தமிழ்

Availability: In stock

₹130.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
காஷ்மீர் பிரச்சினை தொடர்பிலான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பே, "காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை" இது, உலகின் மாபெரும் ஜனநாயக நாடாகப் போற்றப்படும் இந்தியாவின் அடிமடியில் கைவைக்கும் கட்டுரைகளின் தொகுப்பும்கூட. இந்திய வரலாற்றில் ‘முன்னேற்ற’மும் ‘படுகொலை’யும் கைகோத்து நடைபோட்டுள்ளமையை இக்கட்டுரைகள் தோலுரித்துக் காட்டுகின்றன. 2001-ல் இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டது குறித்த மூடுமந்திர விசாரணையை ஆராய்கின்றன; பன்னாட்டு நிறுவனங்கள், ஊடகங்கள், அரசு இயந்திரம் ஆகியவற்றின் கூட்டுச்செயல்பாடுகளை அம்பலப்படுத்துகின்றன; அஃப்சல் குரு வாழ்க்கைப் பாதையை அலசிச்செல்வதோடு அவர் தூக்கில் இடப்பட்டதையும் வன்மையாகக் கண்டிக்கின்றன. சுருங்கக் கூறின், "காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை", நுண்ணிய அரசியல் பார்வையை கூர்மையான நடையில் வெளிப்படுத்தும் கட்டுரைகளின் களஞ்சியமாக அமைந்திருக்கிறது எனலாம்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register