கருத்தாயுதம்


Author: கே.பாலகோபால்
Publisher: சிந்தன் புக்ஸ்
No. of pages: 136
Subject: அரசியல்
Language: தமிழ்

Availability: In stock

₹250.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
நூலின் பகுதி : திராவிட அரசியல் செல்வாக்கு வலுவாக உள்ள தமிழ்நாட்டில் இந்துத்துவவாதத்திற்கு நிற்க நிழல் கிடைக்காது என நினைத்தோம். முதலில் ஜெயலலிதா ஒரு கதவையும், இப்போது கருணாநிதி இரண்டாவது கதவையும் திறந்தனர். தெலங்கானாவில் ரஜாகர் கொடுமைகளால் அன்றிலிருந்து சிறிது பிடிமானமுள்ள பகுதிகளை தாண்டி தெலுகு நாட்டில் இந்துத்துவவாதம் பரவமுடியாதென நினைத்தோம். சந்திரபாபு அந்த வாய்ப்பை ஏற்படுத்தினார். பிஜேபிக்கு வாக்குகள் கிடைப்பது அசாத்தியமென நினைத்த மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, அந்தளவிற்கு இல்லாவிட்டாலும் பிஜேபி அவ்வளவாக வலுவடைவது கஷ்டமென நினைத்த கர்நாடகாவில் ராமகிருஷ்ண ஹெக்டே (எந்த சிறப்புத் தகுதி இல்லாவிட்டாலும் பத்திரிகைகள் அதே வேலையாக இமேஜை பெருக்கிய தலைவர்களில் இவர் முக்கியமானவர்) இந்துத்துவ அரசியலுக்கு கதவுகளைத் திறந்தனர். ஒரு கேரளம் மட்டுமே விதிவிலக்காக மிஞ்சிவிட்டது. விதிவிலக்காகவே இருந்துவிடும் எனும் நம்பிக்கை இல்லை. சில ஆண்டுகளுக்குப்பின் திரும்பிப் பார்த்து இந்த பத்தாண்டுகளை பரிசீலிக்கும் நாள் வரும்போது இதுவே பிரதான விஷயமாக தோன்றும். அவரவர் நலன்களுக்காக மதசார்பற்றவாதிகளாக வலம்வந்த அரசியல் தலைவர்களும், கட்சிகளும் இந்துத்துவவாதிகளின் அரசியல் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த விதம் இந்த பத்தாண்டு அரசியலின் சாராம்சமாக அன்று காணப்படாமல் போகாது. அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கு உதவிய பி.வி.நரசிம்மராவுடன் துவங்கி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், நிதிஷ்குமார், கான்ஷிராம், மாயாவதி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, சந்திரபாபு, கருணாநிதி, ஹெக்டே, ராம்விலாஸ் பஸ்வான், சரத்யாதவ், ஃபரூக் அப்துல்லா - இவர்கள் எவரும் இந்துத்துவவாதிகளாக தம்மை எப்போதும் கூறியதில்லை. மதசார்பற்றவர்களாகவே அரசியலில் வலம் வந்தனர். சிலர் விஷயத்தில் அவர்கள் எந்தளவு மதசார்பற்றவர்கள் என சந்தேகம் இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் மதவாதத்திற்கும், பிராமணிய கருத்தியலுக்கும் சந்தர்பவாதம் அந்தபக்கம் தள்ளாதவரை - தூரமாக இருந்தவர்களே. ஆனால், தமது தற்காலிக சந்தர்பவாதத்தால் இந்துத்துவவாதிகளின் ஆதிக்கத்திற்கு படி படியாக இவர்கள் உதவுகிறார்கள்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register