Sale

கர்கரேயை கொன்றது யார்

Author: எஸ்.எம்.முஷ்ரிஃப்
Publisher: வேர்கள் பதிப்பகம் / இலக்கியச்சோலை
No. of pages: 453
Subject: நிகழ்வுகள்
Language: தமிழ்

Availability: In stock

Regular Price: ₹140.00

Special Price ₹120.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் முதன்மையான பயங்கரவாதக் குழு என காவல்துறை அதிகாரியான எஸ்.எம். முஷ்ரிஃப் ஆதாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இவரது கர்கரேயை கொன்றது யார், நீதித்துறையும் மயங்கியது ஏன் எனும் புத்தகங்கள் இந்துத்துவ பயங்கரவாதத்தின் வலைபின்னலையும், இந்திய உளவுத்துறையின் கைங்கர்யத்தினையும் விரிவாக பதிவு செய்திருக்கிறது.   ஹெமந்த் கர்கரே கொல்லப்பட்டார் என்பதை ஆதாரங்களுடன் நிறுவும் பணியில் களம் கண்டிருக்கிறார் மகாராட்டிரத்தின் முன்னாள் காவல் துறை அய்.ஜி.யான எஸ்.எம். முஷ்ரிப். நாட்டையே உலுக்கிய தேல்ஜி பத்திர ஊழலை, இந்த நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அவர். முஷ்ரிப் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள முக்கியமான ஆங்கில நூல்தான் ‘கர்கரேயை கொன்றது யார்?' (Who killed Karkare?). நாட்டையே உலுக்குகிற ஒரு முக்கிய விஷயத்தில் அதன் மொத்தப் புரிதலையும் மாற்றி அமைக்கிற ஆற்றல், இந்நூலுக்கு இருக்கிறது என்றால் மிகையல்ல. அடிப்படையில் முஷ்ரிப் ஒரு எழுத்தாளர் அல்ல. காலமெல்லாம் அவர் ஓர் அரசு நிர்வாகியாகவே பணியாற்றியவர். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், துணிச்சலுடன் இத்தகைய பெரும் நூலை ஆவணமாக்கியிருப்பது நமக்கு பெரும் வியப்பை அளிக்கிறது. நூல் நெடுகிலும் ஆசிரியர் மனதில் இழையோடும் ஒருவித பதற்றத்தையும், அச்சத்தையும் உணரமுடிகிறது. இந்திய அதிகார வர்க்கம் மற்றும் உளவுத் துறைக்கு இருக்கும் மட்டற்ற அதிகாரம், அவரை அச்சுறுத்துகிறது. அதனாலேயே பல இடங்களில் இந்நூலின் ஆவணங்களை தொகுக்கும்போது, சில பார்வைகளை அழுத்தமாக முன் வைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் ஆசிரியர் மவுனமாகவே இருக்கிறார். இந்நூலுக்குள் இருக்கும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து, மேலும் பல ஆய்வுகளை செய்யவும், பல நூல்களை எழுதவும் இடம் இருக்கிறது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register