கல்லூரி பூக்கள்


Author: பாலகுமாரன்
Publisher: திருமகள் நிலையம்
No. of pages: 416
Subject: நாவல்கள்
Language: தமிழ்

Availability: In stock

₹185.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
வாசகர்களின் கடிதங்களில் ஆரம்பிக்குது புத்தகம். சரபேஸ்வரன் என்னும் இளைஞன் திரைப்படத்தை இயக்கும் ஆர்வத்தோடு தன் கிராமத்தை விட்டு விட்டு சென்னைக்கு வந்து துன்பப்படுகிறார். அவருடைய கிராமத்தில் அவரின் தாய் வெண்ணெய் வியாபாரம் செய்கிறாள். மகனின் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் மகனுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருகிறாள். சரபேஸ்வரனோ வாய்ப்பு கிடைக்காமல் உதவி இயக்குனராக ஒரிரு படங்களில் வேலை செய்கிறார். மானசீகமாக தான் இயக்கத் துடிக்கும் திரைப்படத்திற்கு தேவையான கருவையும், திட்டங்களையும் தயார் செய்து வைக்கிறான். வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்படும் இவர் அன்னையின் வேண்டுகோள்படி ஊருக்கே செல்லலாமா என தவிக்கும் சமயத்தில் சத்யா என்னும் கதாநாயகனுடனான சந்திப்பு ஏற்படுகிறது. இருவரும் இணைந்து ஒரு தயாரிப்பாளரை சந்திக்க வாழக்கைக்கு ஒரு வழி கிடைக்கிறது. அது தான் கல்லூரிப் பூக்கள் திரைப்படம். தன்னை போலவே வாய்ப்புக்காக துடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு திரைப்படம் தயாராகிறது. ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் இந்த துறைக்கு வந்தார்கள், ஒரு மனிதன் காசுக்காகவும், வாய்ப்புக்காகவும், வாழக்கைக்காகவும் எப்படியெல்லாம் வேஷம் போடுகிறான் என்பது இந்த கதையில் வெட்ட வெளிச்சமாகிறது. திரைப்படம் நல்ல முறையில் வெளிவந்து சரபேஸ்வரனுக்கு நல்ல பெயரை வாங்கித் தருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து வேறு சில படங்கள் இயக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பின்பு மாமன் மகளை மணந்து கொண்டு இன்ப வாழ்க்கை வாழ்வதாக முடிகிறது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register