கடவுள் சந்தை


Author: மீரா நந்தா
Publisher: அடையாளம் பதிப்பகம்
No. of pages:
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹300.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
தாராளமயம் இந்தியாவின் பொருளாதாரமாய் ஆகியிருக்கிறது. ஆகவே இந்தியா மேலும் இந்துமயமாகவும் ஆகியிருக்கின்றது. நடுத்தர வர்க்க இந்தியர்கள், வளமடைகின்ற போதே செயலூக்கமுள்ள மதத்தன்மை கொண்டவர்களாகவும் ஆகிறார்கள். கடந்த பத்தாண்டுகள், ஆற்றல் மிகுந்த புதிய சாமியார்களின் பெருக்கம், கோயில் சடங்குகளில் மிகப்பெரிய அதிகரிப்பு, புதிய கடவுளரின் உருவாக்கம், பூசாரிகளின் தேவை அதிகரிப்பு ஆகிய வற்றைக் கண்டுள்ளன. அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சாரங்களில் பூசைகளையும் யாகங்களையும் கால ஒழுங்கோடு பயன்படுத்த முற்பட்டுவிட்டதால், இந்து மதமும் பொதுவாழ்க்கையில் நுழைந்துவிட்டது. இந்த இந்துமயமாதலை அரசும் தனியார்துறை உதவியுடன் ஆதரிக்கிறது. மதச் சுற்றுலாக்களை ஊக்கத்துடன் மேம்படுத்தல், தனியார்துறை நிறுவனங்களிடம் உயர்கல்வியை ஒப்படைத்தல் (இவர்களில் சிலர் மத அறக்கட்டளைகள் வாயிலாக, மதிப்பீடுசார் கல்வியை அளிப்பதற்கு இந்த நிறுவனங்களை நடத்துகிறார்கள்), குருஜீக்களுக்கும் சாமியார்களுக்கும் நிலங்களை மிகவும் குறைந்த விலையில் வழங்குதல் போன்றவற்றுடன், அரசின் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் பல இந்துமதத்தை மேம்படுத்துவ துடன் தொடர்புள்ளவை. ஏன் இது நடந்துள்ளது? இதற்கு அர்த்தம் என்ன? இது இந்திய மதச்சார்பின்மையின் மரணத்தை அறிவிக்கிறதா? கண்ணைத் திறக்கும் இந்த நூலில், மீரா நந்தா மக்கள்சார் இந்துமதத்தின் எழுச்சியை நோக்குவதோடு, முதல்முறையாக, அரசு, கோயில், பெரும்வணிகக்குழும இந்தியா ஆகியவற்றுகிடையிலான நெருக்கத்தையும் உலகமயமாக்கத்தினுள் இந்தியாவின் தாவல், பொருளாதாரச் சீர்திருத்தம் இவற்றிற்குப் பின்னுள்ள குரூப உண்மையையும் விளக்குகிறார். நாட்டை மிகுந்த அபாயத்திற்குள் செலுத்தக்கூடிய தனது சொந்த, நயவஞ்சகமான அடிப்படைவாத வடிவத்தை இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று அவர் வாதிடுகிறார். ஓங்கி அறைகின்ற, முரண்பாடான, வசீகரிக்கும் மெய்ம்மைகளைக் கொண்ட நூல் கடவுள் சந்தை, எல்லாக் குடிமக்களும் அவசியம் படிக்கவேண்டிய ஒன்று.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register