ISIS (சாதித்தது என்ன)


Author: பேராசிரியர் கோயா, செய்யது அலி , ரியாஸ் அஹ்மது , நாகூர் ரிஸ்வான்
Publisher: இலக்கியச்சோலை
No. of pages: 52
Subject: அரசியல்
Language: தமிழ்

Availability: In stock

₹25.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
ஒரு ஏ.கே. 47 துப்பாக்கி, நான்கு கிரனேடுகளுடன், ஒரு கறுப்புக் கொடியைக் கையிலேந்திய எவரும் பண்டைய பிரெஞ்சு மன்னர்களைப் போல ஒரு மலைக் குன்றின் மீது ஏறி நின்று “நான்தான் ஸ்டேட் (அரசு)” என்று பிரகடனப்படுத்த முடியுமா? அவ்வாறெனில் கலந்தாலோசனை (ஷூரா), கருத்தொற்றுமை, சமத்துவம், நீதி உள்ளிட்ட சர்வதேசிய இஸ்லாமிய தத்துவங்களின் நிலை என்னவாகும்? ஒரு பையையும், குர்ஆனையும் கையில் எடுத்துக் கொண்டு நேராக ஷாம் நகரத்திற்கு (சிரியா) சென்றால் போதும் என்று கருதுபவர்கள், இத்தகைய கொள்கை குழப்பமான கேள்விகளையெல்லாம் விரும்பமாட்டார்கள். (பின்னட்டையில் இருந்து ) உரிமைகள் மறுக்கப்படும் போதும் அத்துமீறல்கள் கட்டவிழ்த்து விடப்படும் போதும் போராட்டங்கள் நடைபெறுவது மனித இயல்பே. இந்த போராட்டங்களில் சில வெற்றியை ஈட்டிக் கொடுக்கும் அதே சமயம் இன்னும் சில போராட்டங்கள் இருக்கும் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன. தீர்வை தேடித் திரிந்த மக்கள் இவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று நினைக்கும் அளவிற்கு இவர்கள் சிக்கல்களை ஏற்படுத்தி விடுகின்றனர். மத்திய கிழக்கில் பிரச்சனைகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் விருப்பம். சர்வாதிகாரிகளின் கொட்டம், அரபுலக வசந்தம், மீண்டும் துரோகம் என்றுள்ள மத்திய கிழக்கில் திடீரென்று தோன்றிய இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் ஷாம் (ஐ.எஸ்.ஐ.எஸ்.) கிலாஃபத்தை அறிவித்து கலீஃபாவையும் அறிவித்தது. யார் இவர்கள், எங்கிருந்து வந்தார்கள் என்ற விபரங்களை உலகம் தேடிக் கொண்டிருக்க ஐ.எஸ். தனது சுயரூபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தது. முஸ்லிம்களை ரட்சிக்க வந்துள்ளோம் என்று இவர்கள் கூறினாலும் இவர்களின் செயல்பாடுகள் அதற்கு நேர் முரணாகவே அமைந்துள்ளன. ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் குறித்து புதிய விடியல் இதழில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அவற்றை புத்தகமாக தொகுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இலக்கியச்சோலை தற்போது இப்புத்தகத்தை வெளியிடுகிறது. ( பதிப்புரையில் இருந்து )
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register