இந்திய வரலாற்றில் நிலவுடமைச் சமுகத்தின் தோற்றம்

Author: ஒசாமூ கோண்டோ
Publisher: புதுமை பதிப்பகம்
No. of pages:
Subject: வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹35.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இந்திய வரலாற்றை ஏன் கற்க வேண்டும்? எதன் அடிப்படையில் கற்க வேண்டும்? அதன் இன்றைய தேவை என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதே இந்த புத்தகத்திற்கு ஒரு முன்னுரையை வழங்கும். வரலாற்று வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கும்போது மாவோ: “நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாம் கடந்தகால வரலாற்றில் இருந்து தொடங்க வேண்டும்” என்று கூறுகிறார். அது மட்டுமல்ல, அவர் மேலும் கூறுகிறார்: “ஒரு நாட்டின் சமூக வரலாற்றை கற்காமல் அந்நாட்டில் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்த முடியாது” ஆகவே இன்றைக்கு இந்திய சமூகத்தில் நிலவும் சாதி, மத மற்றும் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்றால் அதன் தோற்றம், வளர்ச்சி குறித்த வரலாற்று ஆய்வை தொடங்குவது என்பது முன் தேவையாகும். இந்தியாவில் விஞ்ஞானப் பூர்வமாக வரலாற்றை ஆய்வு செய்யும்போது ஆசிய உற்பத்தி முறைக்கு இடம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு வர்க்க ஆய்வை முன்வைப்பதற்கும், இந்திய நிலவுடமை பற்றிய புரிதல் முன்நிபந்தனையாகும். அத்தகைய புரிதலுக்கு ஒசாமூ கோண்டோ எழுதிய இச்சிறு வெளியீடு ஒரு தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கையுடன். மிகக் கடினமான வாக்கிய அமைப்புகள் கொண்ட இந்த புத்தகத்தை அனைவரும் எளிமையாக புரிந்துகொள்ளும் விதத்தில் தனக்கே உரித்தான பாணியில் சிறந்தமுறையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register