இந்தியா காலத்தை எதிர்நோக்கி

Author: யேன் மிர்தால்
Publisher: சிந்தன்
No. of pages: 650
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹550.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
பல்வேறு கதைகளின்படி, மாட்டுத் தொழுவத்தில் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணிற்கு அத்தொழுவத்தின் ஒரு மூலையில் பிறந்தவர்தான் மக்காளி கோசலர் ஆவார். ஆகவேதான், அவருக்குக் கோசலன் (மாட்டுத் தொழுவம்) எனப் பெயரிடப்பட்டது. இவரின் தந்தை ஒரு நாடோடிக் கவிஞராக இருந்திருக்கக் கூடும். மக்காளியேகூட தப்பியோடிய ஓர் அடிமையாக இருந்திருக்கக்கூடும். ஒருவேளை, இந்த இரு கதைகளுமே உண்மையாக இருக்கலாம். எப்படியிருந்த போதிலும், இவர் நாடோடிப் பாடகராக, இசைக் கலைஞராக, நடனக்காரராக, கவிஞராக இருந்திருக்கிறார். பின்பு சிறிது காலம் இவர் சமண மதத்தின் பெரும் தீர்க்கதரிசியான மகாவீரருடன் சேர்ந்திருந்தார். ஆனால், பின் அவரிடமிருந்து விலகிவிட்டார். இந்த வாழ்க்கை தரும் துயரம் மிகப் பெரியது. அதற்குத் தீர்வாக மகாவீரர் தந்த போதனைகள் மிகமிகப் போதாதவை. தன் தலைவிதிக்குத் தானே பொறுப்பு என ஒருவர் எப்படி உரிமைகொள்ள முடியும்? இந்தப் பயங்கரங்களுக்குத் தன் கர்மவினைப்படித் தானே காரணமென்று ஒருவன் தன்னைத்தானே நிந்திக்க முடியுமா? சித்தார்த்த கௌதமரும், மகாவீரரும், இந்தக் கொடுமையான (வாழ்க்கை) யதார்த்தம் குறித்துப் பேசியே வீணடித்து வருவதாக மக்காளி கோசலருக்குத் தோன்றியது. உண்மையைப் புரிந்துகொள்ள அவர் விரும்பினார். எந்த ஒன்றையும் மாற்றுவதற்கு மனிதன் லாயக்கற்றவன் என்பதைத் தௌ¤வாக முன்வைக்க அவர் விரும்பினார். தலைவிதி அதாவது நியதிதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. மகாவீரரும், சித்தார்த்த கௌதமரும் மருட்சி (illution) என்ற திரையால் தங்களை மூடிக்கொண்டார்கள். மக்காளி கோசலர் இத்திரையைக் கிழித்தெறிந்ததார: வௌ¤ எல்லையற்று இருண்டும், குளிர் நிறைந்தும், வெறுமையாகவும் இருந்தது. வீரனா யினும், கோழையாயினும், சுறுசுறுப்பானவனாயினும், சோம்பேறி யாயினும், ஞானியாயினும், முட்டாளாயினும் எறியப்பட்ட நூல்கண்டு அதன் அளவிற்கேற்ப நீளுவதுபோல இவர்களும் தமக்கு விதிக்கப்பட்ட இயல்புக்கேற்பவே செயல்படுவார்கள். மக்காளி கோசலர் வெட்டவௌ¤யில் வெறிக்கூத்தாடினார். கலாகலா என்னும் குயவரின் வீட்டில் நடந்த அவ்வெறிக்கூத்தின் இறுதியில் அவரது சீடர் அயம்புலர் அவரின் செயல் குறித்து விளக்கம் கேட்டார். வெறிக்கூத்தாடிய ஞானியாகிய அவர் தந்த பதில் இதுதான்:- “வீணையை வாசி! அன்பனே! வீணையை வாசி!”
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register