இடிந்தகரை சிந்தனைகள்


Author: சுப.உதயகுமாரன்
Publisher: இலக்கியச்சோலை
No. of pages: 80
Subject: வரலாறு
Language: தமிழ்

Availability: In stock

₹60.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
சுயசரிதை நூல்களைப் படிப்பது ஒரு சுகானுபவம்தான்… அதுவும் போராட்ட வீரர்களின் கள அனுபவங்கள் காவியங்களே… இந்த நூற்றாண்டில் இந்தியாவில் நிகழ்ந்த முக்கியமானதொரு போராட்டக் கள சிந்தனைகளை நாம் இந்த நூல் வாயிலாக அறிய முடிகிறது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரை மக்கள் நடத்தி வரும் நீண்ட போராட்ட வரலாற்றின் ஒரு சில பக்கங்களை இதில் பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர் சுப. உதயகுமார். அணுஉலைக்கு எதிராக சாதாரண மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட, அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள் என மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் மக்களின் போராட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதை சுருக்கமாக அவர் விவரிக்கிறார். உலகமயச் சூழலில் மக்கள் நல அரசு என்ற கருத்தெல்லாம் காலாவதியாகி, கார்ப்பரேட்டுகள் நலன் நாடும் அரசுகளுக்கு கீழ் வாழும்போது, இதுபோன்ற சூழல் சீர்கேட்டு திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை எப்படி வடிவமைக்க வேண்டும் என வழிகாட்டுகிறது இடிந்தகரை சிந்தனைகள். 1.குறுகிய கால மக்கள் திரள் நேரடி கள நடவடிக்கை 2. நீண்டகால கருத்து திரள் மறைமுக அரசியல் நடவடிக்கை என போராட்டங்களை வெற்றியை நோக்கி நகர்த்துவதை அனுபவத்தின் வழி நமக்கு போதிக்கிறார் பேராசிரியர். நுகர்வு கலாச்சாரத்திற்கு தீனி போடுவதற்காக, பண்டங்களை உற்பத்தி செய்து பெருக்கித் தள்ள மின்சாரம் அவசியத் தேவையாக உள்ளது. அதனை என்ன விலை கொடுத்தும் முதலாளிகளுக்கு பெற்றுக் கொடுக்க அரசுகள் முண்டியடித்துக் கொண்டு செயல்படும் உலகில் வாழ்கிறோம். வாக்குகளுக்காக இதுபோன்ற மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் ஆட்சியாளர்கள், திரை மறைவில் அணுஉலை போன்ற ஆபத்தான திட்டங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதுடன், போராடும் மக்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவி விடும் அராஜகத்துக்கு இடிந்தகரை மக்கள் அண்மைய உதாரணமாவர். இந்தியாவில் அணுசக்தியின் பின்னுள்ள பார்ப்பன அரசியலை நுணுக்கமாக ஆய்வு செய்யும் ‘பார்ப்பனத்துவமும் அணுத்துவமும்’ என்ற கட்டுரை, இந்துத்துவ சிந்தனை கொண்டவர்கள் ஆட்சி செய்யும் இந்த நாட்களில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்து ராஜ்ஜியக் கனவுகளை முன்மொழியும் போதே சாவர்க்கர், இராணுவ வல்லமைக்கான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து தனது அடிவருடிகளுக்கு சமிக்ஞை காட்டிவிட்டு சென்றிருக்கிறார். இராணுவ வாதத்தின் மிக உயர்ந்த நிலை அணு வல்லமையாகும். வாஜ்பாய் ஆட்சிக்கு வந்த உடனேயே பொக்ரான் அணு ஆயுத சோதனையை நிகழ்த்தி குருவின் கனவை நிறைவேற்றினார். அணு ஆராய்ச்சி துறையில் ‘அவாளே’ வீற்றிருந்து, பார்ப்பனீய மேலாண்மைகளை தக்க வைத்துக் கொள்ள எப்படி அணுத்துவ சிந்தனைகளை செயல்படுத்தி வருகின்றனர் என உதயகுமார் இந்தக் கட்டுரையில் ஆய்வு செய்கிறார். சூழல் சீர்கேடு பற்றிய விழிப்புணர்வு சர்வதேச அளவில் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. அணுஉலை போன்ற ஆபத்து நிறைந்த திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் அணு சக்திக்கு பார்ப்பனீயம் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நுகர்வு வெறியை தணித்துக் கொள்ள ஒரு சிறு கூட்டம், பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடுவதுதான் உலகமயம். இந்திய சமூகத்தில் சொற்ப தொகையினராக உள்ள பார்ப்பனர்கள், ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் சுரண்டி வாழ்ந்து வரும் நிலையில், மின்சார தயாரிப்புக்காக அணுஉலை திட்டங்களை ஆதரிப்பதும், அதற்காக சூழல் சீர்கேட்டை ஊக்குவிப்பதும் இந்துத்துவத்தின் சாரத்துடன் ஒத்துப் போவதை சுருக்கமாக விளக்குகிறார் உதயகுமார். இது விரிவாக ஆய்வு செய்ய வேண்டிய கருத்துகளாகும். நூலின் இன்னொரு முக்கியமான கட்டுரை கடல் விவசாயம் பற்றியதாகும். பூமியில் உள்ள வளங்களை ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் பட்டியலில் கடல் வளமும் இணைந்துள்ளது. கடலைத் தூய்மைப் படுத்துகிறோம் என விஞ்ஞானப்பூர்வமாக நுழைந்து, அங்கு வாழ்ந்து வரும் கடலோடிகளை பன்னாட்டு நிறுவனங்கள் விரட்ட அரசே சட்டமியற்றும் கொடுமை அந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை, ஈழப்போர் நினைவு முள்ளிவாய்க்கால் முற்றம் பற்றிய கட்டுரைகளும் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களுடன் போராட்டக் களம் கண்டிருப்பதாலோ என்னவோ, பேராசிரியரின் எழுத்துக்கள் அதி மேதாவித்தனம் இன்றி எளிமையாக உள்ளது. கூடங்குளம் தாண்டி வெளியே இருக்கும் மக்களுக்கு, மின்சாரம் மட்டுமே கரிசனமாக உள்ள நிலையில், இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு பின்னுள்ள அரசியலை கொஞ்சம் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register