ஹாஷிம்புரா


Author: விபூதி நாரணராவ்
Publisher: இலக்கியச்சோலை
No. of pages: 200
Subject: சட்டம்
Language: தமிழ்

Availability: In stock

₹120.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
1987 ஹாஷிம்புராவில் நடந்த காவல் கூட்டுப் படுகொலைகள் ஜனநாயக இந்தியாவில் மறைக்கப்பட்ட மறுக்கமுடியாத அவமானகரமான கொலை பாதகச் செயல். தன் நாட்டின் சொந்த குடிமக்களையே அவர்களை பாதுகாக்க வேண்டிய காவல் நிர்வாகமே அவர்களை கொடூரமாக சுட்டு வீழ்த்தியிருப்பது வெட்கக்கரமானது. தப்பிப் பிழைத்தவர்களின் சம்பவத்தை பற்றிய சாட்சியங்கள் மனதை திகிலடையச் செய்கிறது. 42 முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த பின்னனியை கண்டறிய முடியாததற்கும், சிறிய செய்தியாகக்கூட பத்திரிக்கைகள் பதிவிடாததற்கும் காரணம் என்னவாக இருக்க முடியும். அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரு காரணம் போதாதா? படுகொலைகள் நடந்த பின்பு அரசு நடவடிக்கைகள் அனைத்துமே இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே இருக்கக்கூடாது என்பதில் முனைப்புக் காட்டியுள்ளதை வாசிக்கும் தருவாயில் அரசு அதிகாரிகளின் மனதில் வகுப்புவாத சிந்தனைகள் நிறைந்திருப்பதை பட்டவர்த்தனமாக உணர முடிகிறது. தப்பிப்பிழைத்தவர்களையும் தடம் தெரியாமல் செய்ய வேண்டும் என்ற சில அதிகாரிகளின் பரிந்துரைகள் மிருகத்தனத்தின் உச்சம். 28 ஆண்டுகளுக்கு பிறகு 2015 ல் வெளியான தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்ட 16 நபர்களையும் நிரபராதிகள் என விடுவித்தது. விடை காண முடியாத வழக்காகவே திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. தாமதிக்கப்படும் நீதி - மறுக்கப்படும் நீதியாகவே கருதப்படும்.ஒவ்வொருவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான நூல்களில் ஒன்றாக இலக்கியச்சோலை பதிப்பகம் வரிசைப்படுத்தி இருப்பது பாராட்டுக்குறியது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register