குஜராத் இனப்படுகொலை 2002 : மனித இனத்திற்கெதிரான குற்றம்


Author: அறிக்கை
Publisher: இலக்கியச்சோலை
No. of pages: 136
Subject: சட்டம்
Language: தமிழ்

Availability: In stock

₹80.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
காவல்துறையின் ஆசீர்வாதத்தோடு களம் இறங்கிய கயவர்களால் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டனர். முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் நீதியையே பரிகசிக்கும் விதமாக உயிரோடு கொளுத்தப்பட்டனர். சட்ட ஒழுங்கைக் காப்பதாக உறுதிமொழி எடுத்து பதவியேற்ற முதல்வர் நரேந்திர மோடி இந்த மிருகத்தனமான வன்முறைக்கு முழு ஒத்துழைப்பு தரும் வகையில் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். ஏன், அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களே தெருவில் இறங்கி இந்த அக்கிரமங்களை அரங்கேற்ற கட்டளைகள் பிறப்பித்தனர். இந்த இழிநிலையைக் கண்டு, நாடு முழுவதும் மனசாட்சியுடைய மக்கள் விழித்தெழுந்தார்கள். அப்படி விழித்தெழுந்தவர்களால் ஒரு விசாரணைக் குழு என் தலைமையில் அமைக்கப்பட்டது. நான் அக்குழுவுக்குத் தலைமையேற்றிருந்தாலும், வெகு சிறப்பாகவும், திறம்படவும் இதனை வழிநடத்திச் சென்றது ஓர் இளம் பெண். அவர்தான் டீஸ்டா செடல்வாட்! அவர் கண்ணியத்திற்குரிய ஓய்வு பெற்ற நீதியரசர்களை ஒருங்கிணைத்து இம் மாபெரும் பணியை மேற்கொண்டார். அந்த நீதியரசர்கள் ஓய்வு பெற்றுவிட்டாலும் மக்களுக்குத் தொண்டாற்றும் இந்தப் பொதுச் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் கீழ் இந்தக் கொடூரக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சமூக ஒற்றுமையின் சங்க நாதம், மத நல்லிணக்கத்தின் மங்காத அழகு, இந்திய மனித குலத்தின் மதச்சார்பின்மை - இந்த மகோன்னதங்களைக் கட்டிக் காக்க நாமெல்லாம் போராடுவோம். குஜராத் கோரம் ஒரு தீய சம்பவம். பேரழிவு தரும் நிகழ்வு. நமது பன்முகக் கலாச்சாரம், மதச்சார்பற்ற பாரம்பரியம், சமூக நீதி ஒளிரும் ஜனநாயகம் - இவற்றின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம். இந்தியா வெற்றி பெற வேண்டும்!
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register