கடவுள் ஒரு பொய் நம்பிக்கை


Author: ரிச்சர்டு டாக்கின்ஸ்
Publisher: திராவிடர் கழகம்
No. of pages: 608
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹400.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற, ரிச்சர்டு டாகின்ஸ் எழுதியுள்ள The God - Delusion என்னும் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே, ‘கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை’. ரிச்சர்டு டாகின்ஸ், இங்கிலாந்தின் காலனி நாடாக அன்று இருந்த கென்யாவின், நைரோபி நகரில் பிறந்தவர். எனினும் எட்டு வயதுச் சிறுவனாக இருந்த போதே இங்கிலாந்து வந்துவிட்டார். லண்டனுக்கு அருகில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் தன் படிப்பையும், ஆய்வையும் நிகழ்த்தியர். இப்போது அவருக்கு வயது 72. தன்னுடைய 65ஆம் அகவையில், 2006ஆம் ஆண்டு அவர் எழுதிய நூல்தான் கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை என்பது. 31 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள இந்நூலின் ஆங்கிலப் படிகள் மட்டுமே 15 இலட்சத்திற்கும் மேலாக விற்பனையாகி உள்ளன. ஏறத்தாழ 600 பக்கங்களைக் கொண்ட இந்நூலை, மறைந்த கு.வெ.கி.ஆசான் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசானின் அழகிய மொழிநடை, மொழிபெயர்ப்பு நூலைப் போலன்றி, ஒரு தமிழ் நூலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பதிப்புரை, படிப்போரின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் உள்ளது. நூலாசிரியர் டாகின்ஸ், ஓர் அறிவியல் ஆய்வாளர் என்பதால், அறிவியல் சான்றுகளுடன் இந்நூலுள் பகுத்தறிவுக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வெறுமனே வாதம் செய்யும் நூலாக அல்லாமல், அரிய அறிவியல் ஆய்வு நூலாக இந்நூல் நமக்குக் கிடைத்துள்ளது. பத்து இயல்களைத் தன்னுள் கொண்டிருக்கும் இந்நூல், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், கடவுள் மறுப்பையும் பல்வேறு கோணங்களில் முன்வைக்கின்றது.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register