கீதையின் மறுபக்கம்


Author: கி.வீரமணி
Publisher: திராவிடர் கழகம்
No. of pages: 416
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹150.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
நாதூராம் விநாயக கோட்சே நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தை எடுத்துக்காட்டி, அர்ச்சுனன் பல கொலைகளைப் புரிவதற்குத் தூண்டுகோலாய் இருந்தது கீதை. அக்காலத்தில் மட்டுமல்ல, நம் கண்ணெதிரே நிகழ்காலத்தில் தேசப் பிதா என வர்ணிக்கப்பட்ட காந்தியாரையும் பலி வாங்கிய கீதை ஒரு கொலை நூல்தான் என்பதில் அய்யமில்லை17 என்று வாதிடுகின்றார் கி.வீரமணி. நூலில் மகாபாரதம் நடந்த கதை அல்ல என்ற கருத்தைத் தெரிவித்து வி.ஆர்.நார்லா ஆர்.ஜி. பண்டர்கார், ஆர்.சி. தத், எட்வர்ட் வாஷ்பர்ன் ஆப்கின்ஸ், மாக்ஸ்முல்லர், டி.டி. கோசாம்பி, வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் முதலிய அறிஞர்களின் கூற்றைத் தமக்கு ஆதரவாக மேற்கோள் காட்டுகின்றார். மகாபாரதப் போரில் 3,93,660 ரதங்கள், 3,93,600 யானைகள், 11,80,980 குதிரைகள், 19,68,300 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்னும் புள்ளி விவரத்தை எடுத்துக்காட்டி, எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு பெரிய போர்க்கள மைதானம் இவ்வளவு பெரிய சைன்ய படைகள் இருக்க வாய்ப்பு உண்டா? இது ஓர் அதீதக் கற்பனை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? என்று வினா எழுப்புகிறார்ஆசிரியர் . சாதி தர்மத்தைக் காப்பாற்றுவதாலேயே கீதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது என்று கூறும்ஆசிரியர் , கடவுள் அவதாரம்தான் நால்வகை வருணத்தையும் வர்ண தர்மத்தையும் படைத்தவர் என்று காட்டினால்தான் இந்தப் பேதத்தை நிலைக்க வைக்க முடியும் என்பதற்காகச் சூழ்ச்சியாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவர்தான் கிருஷ்ணன் என்கின்றார் ஆசிரியர் .
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register