எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963)


Author: சி. சு. செல்லப்பா
Publisher: சந்தியா பதிப்பகம்
No. of pages: 496
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹375.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
தமிழ் இலக்கிய இதழ்களின் வரலாற்றில் ‘எழுத்து’ இதழின் பங்களிப்பு அசாத்தியமானது. சின்னமனூர் சுப்ரமணியம் செல்லப்பா(சி.சு.செ) என்ற தனிமனிதனின் வைக்ராக்யத்தால் அது சாத்தியமானது. தமிழில் விமர்சனம் என்ற பிரிவை வளமாக்கியவர் சி.சு.செ. விமர்சனக் கோட்பாடுகளை தீவிரமாக முன்வைத்தவரும் அவரே. ரசனையை மட்டும் தனது நாடித் துடிப்பாகக் கொண்டிருந்த க.நா.சுவுடன் தளராது அமர் செய்து வந்திருக்கிறார் சி.சு.செ. வந்த வம்பையோ, எழுந்த விவாதத்தையோ ‘எழுத்தில்’ புறந்தள்ளவில்லை. எழுத்தின் தொடக்க இதழிலேயே க.நா.சுவின் கட்டுரை இடம் பெற்றுள்ளது. ஆனால் க.நா.சு.வின் விமர்சனப் பார்வையை சி.சு.செ. கடுமையாகத் தாக்கியுள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் வெளிவந்த விமர்சன நூல்களை சலிப்பற்று வாசித்தார். அந்த வாசிப்பின் மூலம் தமிழ் இலக்கியத்தின் விமர்சனத் துறைக்கு புதிய ஒளியையும் வீச்சையும் உருவாக்கி கொடுத்திருக்கிறார். இன்றைய நூல் விமர்சன வளர்ச்சியின் ஆதிமூலமாகத் தோன்றுகிறது இவரது எழுத்து. சி.சு.செ இதற்காகத் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை விரும்பி அர்ப்பணித்திருக்கிறார். கட்டுரைகளில் நீண்ட வாக்கியங்களால் வாசகரை இழுத்துச் செல்பவர் சி.சு.செ. வம்பிலும் வாதிலும் எதிராளியின் வாதங்களை மேற்கோள்களாகப் பயன்படுத்தி தனது எதிர்வினையை குறுகத் தரிக்கிறார். ‘எழுத்து’வின் அடுத்த கட்டத்தில் புதுக்கவிதை வடிவம் விஸ்வரூபம் எடுக்கிறது. புலமைக்கு எதிரான படைப்பிலக்கிய குரலை சி.சு.செ முன்னெடுத்துச் செல்கிறார். சீரும் தளையும் இல்லாத கவிதைக்கு எதிரான புலவர்களின் கண்டனங்களை எதிர்த்து நின்ற சி.சு.செ.வின் துணிச்சலுக்கு இன்றைய நவீன கவிதை கடன்பட்டிருக்கிறது. வாசிப்பின் ஒலிநயத்துக்கு முன்னுரிமை தந்து, இலக்கண விதிகளை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கிற சுபாவம் கொண்டவராக அறியப்படுகிறார் சி.சு.செ. ‘இன்றைய’ என்பதை ‘இன்றய’ என்று எழுதுகிறார். ‘ஒற்று’டன் அவர் ஒத்துப்போக மறுக்கிறார். பதினொரு ஆண்டுகள் வெளிவந்த எழுத்து இதழ்களை ஒட்டுமொத்தமாக படிக்கிறபோது, தமிழ் இலக்கிய உலகின் சில பிரச்சனைகள் கடந்த ஐம்பதாண்டுகளில் எவ்வித மாற்றமும் கண்டதாகத் தெரியவில்லை. சாகித்ய அகாதெமியிலிருந்து நூலக ஆணைக்குழு நடவடிக்கைகள், அரசு சார்ந்த கருத்தரங்கங்கள் வரை பிரச்சனைகள் அப்படியே நீள்கிறது. தமிழ் லிபிக்கு மாற்று லிபி தேடும் முயற்சியில் எழுந்த சர்ச்சை கூட இன்று புதிதாக முன்வைக்கப்பட்ட ஒன்று அல்ல. இதை சி.சு.செவின் ‘பொது எழுத்து’ (மே, 1960) என்ற கட்டுரை மூலம் நாம் அறிய முடிகிறது. எழுத்து இதழில் வெளிவந்த சி.சு.செ.வின் படைப்புகளை மட்டும் தொகுக்கும் முயற்சியின் முதற்படிகட்டு இந்த நூல். சி.சு.செ ‘அசுவதி’ என்ற புனைப்பெயரிலும் எழுதி வந்திருக்கிறார் என்பது, அவர் தனது கையெழுத்திலேயே எழுதி வைத்திருந்த ‘எழுத்து’ படைப்புகளின் பட்டியலிலிருந்து தெரியவருகிறது. இந்தப் பட்டியல் தொகுப்பாளர் கி.அ. சச்சிதானந்தம் வசம் உள்ளது. இத்தொகுப்பில் எழுத்தின் முதல் ஐந்தாண்டு இதழ்களில் வெளிவந்த சி.சு.செ.வின் முகப்புரைகளும் விமர்சனம் சார்ந்த கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. சில நீண்ட கட்டுரைகளும் தொடர் கட்டுரைகளும் சிறு பிரசுரங்களாக தனித்தனியாக வெளியிடப்பட உள்ளன. சிதைந்த மூலப்பிரதிகளிலிருந்து பெரும்பாடுபட்டு இத்தொகுப்பு உருவாகியுள்ளது. இதை உருவாக்கும் பணியில் தன்னை அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபடுத்திக் கொண்ட ஜெயக்குமார் நன்றிக்கும் போற்றுதலுக்கும் உரியவர். துணை நின்ற மேனகாவின் பணி பாராட்டுக்குறியது. இந்த இதழ்த் தொகுப்புக்கு பதிப்புரிமை வழங்கிய சி.சு.செ.வின் மகனார் திரு. சுப்ரமண்யம் அவர்களுக்கும் 50 ஆண்டுகளாக இந்த இதழ்களை பாதுகாத்து வந்த தொகுப்பாளர் கி.அ. சச்சிதானந்தம் அவர்களுக்கும் எமது நன்றிகள். விடுபட்டிருந்த எழுத்து இதழ்களை தந்துதவிய கவிஞர் வைத்தீஸ்வரனுக்கும் ‘நவீன விருட்சம்’ அழகிய சிங்கருக்கும், ‘தளம்’ இதழாசிரியர் ‘பாரவி’க்கும் எமது நன்றிகள். இந்த நூலின் பின்ணிணைப்பாக எழுத்தின் முதல் இதழில் வெளிவந்த க.நா.சு.வின் ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்’ கட்டுரையும் வாசகர்களின் தரமான எதிர்வினைகள் சிலவும் சேர்க்கப்பட்டுள்ளன. சந்தியா பதிப்பகம்
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register