ஈரோட்டுப் பாதை சரியா?


Author: ப. ஜீவானந்தம்
Publisher: புதுமை பதிப்பகம்
No. of pages:
Subject: கட்டுரைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹45.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
ஈரோட்டுப் பாதை சரியா? எனும் தலைப்பில் தோழர் ஜீவாவால் 1947- டிசம்பர் மற்றும் 1948- பிப்ரவரி ஆகிய மாதங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு கமிட்டியின் மாத பத்திரிக்கையான “ஜனநாயகம்“ மாத இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இச்சிறுநூல். ஈ.வே.ராவின் அரசியல் வழி என்ன என்பதை மிகத் தெளிவாக விளக்குவதோடு அல்லாமல் அவர் முன்வைத்த அரசியலை விவாதித்துள்ளார் தோழர் ஜீவா. தமிழக வரலாற்றில் 1932ஆம் ஆண்டு ஒரு பாரிய மாற்றம் நிகழ்ந்தது. அது தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால், இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டு தடைசெய்யப்பட்டது. இதன் பின்னர்தான் முற்போக்கு வாதிகள் என்று அறியப்பட்ட பலர் பற்றி ஆழமாக தெரிந்தது. அதில் ஒருவர் தான் ஈ.வே.ரா அவர்கள். 1932க்கு முன்னிருந்த ரஷ்யக் காதல், மற்றும் சமதர்மக் கோட்பாடுகளின் மீது அவருக்கிருந்த ஆர்வம் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் அடக்குமுறைக்கு பின்னர் சந்தர்ப்பவாதமாகக் கைவிடப்பட்டு, காலனியாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்ட, திராவிட இனக் கோட்பாடுகளை தன்னுடைய கொள்கையாக மாற்றிக்கொண்டு, எப்படி பிரிட்டிஷ் சர்க்காருக்கு சேவகனாகவும், பார்ப்பனரல்லாத நிலவுடமை கும்பலின் பிரதிநிதியாகவும் மாறினார் என்பதை தனது சொந்த அனுபவத்தின் மூலம் தோழர் ஜீவா அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register