பாதுஷா என்ற கால்நடையாளன்

Author: உண்ணி.ஆர்
Translator : சுகுமாரன்
Publisher: காலச்சுவடு
No. of pages:
Subject: சிறுகதைகள்
Language: தமிழ்

Availability: In stock

₹175.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இளம் தலைமுறை மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான உண்ணி.ஆரின் சிறுகதைத் தொகுப்பு இது. இதிலுள்ள கதைகள், அதிகபட்சம் நான்கைந்து பக்கங்களே வருகின்றன. அதற்குள் வாழ்க்கையின் பலவித அம்சங்களை, மனத்தின் வினோதங்களைச் சித்திரிக்க முயல்கின்றன. மரியா என்னும் நோயுற்ற சிறுமியை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ள ‘மூன்று பயணிகள்’, இழப்பின் துயரத்துக்கு அருகில் நம்மை நிறுத்துகிறது. சில மணி நேரங்கள் முன்பு கடற்கரையில் காலாற நடந்துவந்த பாதுஷா, வெளிச்சம் வராத சிறைக்கூடத்தில் அகப்பட்டுக்கிடக்கும் துயரத்தை ‘பாதுஷா என்ற கால்நடையாளன்’ கதையில் விநோதத்துடன் சொல்கிறார் உண்ணி. திரைப்படங்களாகக் கவனம் பெற்ற உண்ணியின் ‘ஒழிவுதிவசத்த களி’, ‘லீலை’ ஆகிய சிறுகதைகளும் இத்தொகுப்பில் உண்டு. காரல் மார்க்ஸ் குறித்த புதுமையான சிறுகதையும் உள்ளது. ( தி ஹிந்து)
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register