அயோத்தி: இருண்ட இரவு பாபர் ( மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு )

Author: கிருஷ்ணா ஜா திரேந்திர கே.ஜா
Publisher: விடியல்
No. of pages:
Subject: இந்துத்துவம்
Language: தமிழ்

Availability: In stock

₹150.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
அரசியலில் மதவாதம் இல்லாதிருந்தால் மட்டுமே நாடு செழித்திருக்கும் என்றாலும், மதவாதிகள் பலர் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளவும் எப்போது வேண்டுமானாலும் மதத்தீவிரவாதத்தை பயன்படுத்த கையில் வைத்திருக்கும் ஓர் ஆயுதமே பாபர் மசூதி. 1858இல் துவங்கிய பாபர் மசூதிப் பிரச்சனை, 22.12.1949 இன் நள்ளிரவில் கையகப்படுத்தப்பட்ட பின் அதன் பின்புலம் பற்றிய வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய அரசானது, அது 6.12.1992 இல் இடிக்கப்பட்டதற்கு நான்காண்டுகளுக்குப் பிறகே நான்கே வரிகளில் அடங்கக்கூடிய அறிக்கையை சமர்ப்பித்து தன் கடமையை முடித்துக் கொண்டது. அரசாங்கம் செய்யத் தவறிய இந்த அசாதாரண செயலை கிருஷ்ணா ஜா மற்றும் தீரேந்திர ஜா எனும் தனிப்பட்ட இருநபர்கள் புலனாய்வு செய்து அளித்த (மிகப் பொருத்தமான பெயர்) வெள்ளை அறிக்கையே “அயோத்தி இருண்ட இரவு” எனும் புத்தகமாக விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. காந்தி கொலைவழக்கில் ஈடுபட்டவர்களே இந்தச் செயலிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கும் செய்தியாகும். காந்தி ஏன் கொலை செய்யப்பட்டார். ஏன் பாபர் மசூதி கையப்படுத்தப்பட்டது ? யாரால் என்பதையெல்லாம் புலனாய்வு செய்து அந்த ஆய்வறிக்கையைத்தான் இந்த புத்தகம் வெளியிடுகிறது. வரலாற்று ஆசிரியர்கள், அரசியல் ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. -Senthilkumar Chandrasekaran
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register