அருள் வடிவானவர்

Author: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
Publisher: சாஜிதா புக் சென்டர்
No. of pages: 224
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹150.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இன்று அடிமை முறை உலகில் எங்கும் வழக்கில் இல்லை எனச் சொல்லப்படுகின்றது.ஆனால் இது உண்மையல்ல. அடிமை என்னும் பெயர் வழக்கில் இல்லையே ஒழிய அந்நடைமுறை ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நிலவுகின்றது. சாலை ஓரங்களிலும் பெருங்கட்டுமானப் பகுதிகளிலும் சின்னச் சின்ன தகரக்கூரைக் குடிசைகளில் கால்நீட்டிப் படுக்கக்கூடப் போதிய இட வசதியில்லாமல் ஆந்திர, வட மாநிலத் தொழிலாளர்கள் தேங்கிய முகங்களோடு வேலை செய்வதை நீங்கள் பார்த்ததே இல்லையா? அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பிரமிக்கத்தக்க பெருநிறுவனங்களில் மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்கள் சிறுஊதியம் பெற்றுக்கொண்டு வாழ்நாள் முழுக்க எட்டுக்கு எட்டு தங்கும் அறைகளில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளோடு விடுபடவே இயலாத கூலி அடிமைகளாகப் பணியாற்றி வருகின்றனர். இந்தக் காட்சிகளை மனக்கண் கொணர்ந்தால் மட்டுமே பணியாளர்கள், தொழிலாளர்கள் விஷயத்தில் அண்ணல் நபிகளாரின் நடத்தையை அளவிட முடியும். ‘உங்கள் பணியாளர்கள் உங்கள் சகோதரர்கள்! உங்களது பொறுப்பில் அவர்களை அல்லாஹ் ஒப்படைத்துள்ளான். தனது பொறுப்பின் கீழிருக்கும் சகோதரருக்கு, தான் உண்பதையே உண்ண அளிக்கவேண்டும், தான் குடிப்பதையே குடிக்கக் கொடுக்க வேண்டும். தான் அணிவதையே உடுத்தக் கொடுக்க வேண்டும். அவர் சக்திக்கு மீறிய பணியை அவர்மீது சுமத்தக் கூடாது. அப்படிச் சுமத்த நேரினால் கூடமாட ஒத்தாசை செய்யவேண்டும்!’ என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் - அறிவுறுத்தவில்லை - கட்டளையிட்டுள்ளார்கள். (புகாரீ, முஸ்லிம்) ‘நீங்கள் அனைவரும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டவர்கள். ஒரே ஆண்-பெண் இணை மூலம் உருத்தோன்றியவர்கள். ஆகையால் உங்கள் இடையே பாரபட்சமோ பாகுபாடோ கிடையவே கிடையாது!’ என்பதுதான் இந்த உலகத்திற்கு இஸ்லாம் அளிக்கின்ற முதன்மைச் செய்தி. (அல்குர்ஆன் 4:1) ‘உங்கள் சகோதரர்கள்’ என்பது எவ்வளவு பெரிய சொல்! காசுக்கு மாரடிக்கும் கூலியாள் அல்லன் அவன். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புக்கு ஒப்பானவன்! ஸுப்ஹானல்லாஹ். உணவிலும் உடையிலும் சுமத்தும் சுமையிலும் உனக்கு ஒப்பாக அவனை ஆக்கு! என்கின்றார்கள் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள். (இந்நூல் பக்கம் : 86-87)
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register