அரபுப் புரட்சி


Author: யமுனா ராஜேந்திரன்
Publisher: அடையாளம் பதிப்பகம்
No. of pages: 288
Subject: அரசியல்
Language:

Availability: In stock

₹210.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
இன்று உலகெங்கும் அலையடித்துக்கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி ஆகும். ஸ்பெயின் இன்டிக்னோக்கள், வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தன் தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபில் ஜனநாயகம் என்பது சாத்தியமல்ல என்பவர்களை மறுத்தபடி. அரபு உலகெங்கும் எழுந்த ஜனநாயகத்திற்கான வெகுமக்கள்திரன் எழுச்சி அது. மரபார்ந்த கருத்தியல் வரையறைக்களைத் தாண்டி காலனியர் சுமைகளைத் தன் தோள்களில் இருந்து உதறியபடி, அரபு நிலப்படத்தை மறுவரையறை செய்த மக்கள் எழுச்சி அது. இஸ்லாம் என்பது வன்முறயான வாழ்முறை என்பதை மறுத்து, வன்முறையல்லாத புதிய மக்கள் திறன் போராட்டமுறை குறித்த தேடலை உலகெங்கும் எழுப்பின அரபுப்புரட்சியின் அனுபவங்கள் இன்றைய உலகில் அரபுப்புரட்சியின் அரசியல் முக்கியத்துவத்தையும் புதிய போராட்ட வடிவங்களுக்கான அதன் தேடலையும் ஆவணப்படுத்தும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு நூல் வடிவம் பெற்றுள்ளன.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register