அன்புள்ள.. ரஜினிகாந்த்


Author: சிராஜுல் ஹஸன்
Publisher: IFT
No. of pages: 64
Subject: இஸ்லாம்
Language: தமிழ்

Availability: In stock

₹28.00

Free shipping on all orders over
Rs.1000/- in India

Any Query?
+91-8220658318

Your Transaction Is Secured With
SSL Security


Details
Details
ஒரு செய்தியைக் கட்டுரையாகச் சொல்வதைவிட கடித வடிவில் சொல்லும்போது அந்தச் செய்தி மிக விரைவில் மக்களைச் சென்றடைகிறது. அதனால்தான் தமிழில் ‘கடித இலக்கியம்’ அன்றும் இன்றும் போற்றப்படும் இலக்கிய வடிவமாகவே உள்ளது. பல்வேறு அறிஞர் பெருமக்களின் கடிதங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளன. அவையெல்லாம் காலப் பெட்டகங்களாய் இன்றும் பயன் அளித்து வருகின்றன. பல்வேறு நாட்டு மன்னர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுதிய கடிதங்கள் பல நாடுகளின் வரலாற்றையே மாற்றி அமைத்தன. அறிஞர் அண்ணா ‘தம்பிக்கு...’ எழுதிய கடிதங்கள் திராவிட இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாகவே திகழ்கின்றன. தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாக எழுதப்படும் கடிதங்கள் சிலருக்குப் பிடிக்கலாம்; சிலருக்குப் பிடிக்காமலும் போகலாம். ஆனால் பொதுவாழ்வில் இருப்பவர்களை நேரடியாக அழைத்து எழுதப்படும் ‘திறந்த மடல்கள்’ எல்லோரும் விரும்பிப் படிக்கும் வகையில் அமைந்திருக்கும். சொல்ல விரும்பிய செய்தி-களை அழகாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைக்க முடியும். அந்த வகையில் பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட ஆறு திறந்த மடல்கள் இந்தச் சிறிய நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. * நடிகர் ரஜினிகாந்த், * இயக்குநர் மணிரத்னம், * ‘துக்ளக்’ ஆசிரியர் சோ, * நடிகர் விஜயகாந்த், * ‘கல்கி’ வார இதழின் ஆசிரியர், * இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு ‘சமரசம்’ இதழின் பொறுப்பாசிரியர் சிராஜுல் ஹஸன் எழுதிய திறந்த மடல்கள்தாம் இவை. ஒவ்வொரு திறந்த மடலுக்கும் வேறுபட்ட ஒவ்வொரு பின்னணி உண்டு. இன்றைய சமுதாய அமைப்பு குறித்து ‘குமுதம்’ இதழுக்கு ரஜினிகாந்த் அளித்த ஒரு நேர்காணலில் (ரஜினியை பேட்டி கண்டவர் அப்பொழுது ‘குமுதம்’ ஆசிரியராக இருந்த சுஜாதா) சொல்லியிருந்த கருத்து-களின் அடிப்படையில் உருவானதுதான் ‘அன்புள்ள ரஜினிகாந்த்...’ திறந்தமடல். ‘பம்பாய்’ படம் வெளியானதைத் தொடர்ந்து உருவான சர்ச்சைகளின் பின்னணியில் உருக்கொண்டதுதான் ‘அன்புள்ள மணிரத்னம்..’ இந்தத் திறந்த மடல் ஆங்கிலத்தில் மொழி-பெயர்க்கப்பட்டு ‘ரேடியன்ஸ்’ வார இதழிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் உள்ள கோவில்களை முஸ்லிம்கள் இடித்துத் தகர்த்தார்கள் என்று பா.ஜ.க.வினர் பரப்பிய பொய்ச் செய்தி தொடர்பாக, பதினைந்து நாள்கள் இடைவெளியில் ‘துக்ளக்’ ஆசிரியர் சோ எடுத்த இரண்டு வகையான நிலைப்பாடுகள் குறித்து தெளிவாகவும் அறிவுப்பூர்வமாகவும் விவாதிக்கிறது ‘அன்புள்ள சோ அவர்களுக்கு...’ நடிகர் விஜயகாந்த் 2005, செப்டம்பர் 14 அன்று சொந்தக் கட்சி தொடங்கினார். ஊழல் இல்லாத ஒரு நல்லாட்சியை எப்படி அமைப்பது என்பதைத் தொடக்கத்திலேயே அவருக்குச் சொல்லிவிடலாமே எனும் ஆர்வத்தில் எழுதப்பட்டதுதான் ‘அன்புள்ள விஜயகாந்த்..!’ அரசியலில் ஈடுபடுபவர்களுக்கும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் துடிப்பவர்களுக்கும் இறைவனின் வழிகாட்டுதல் எந்த அளவு இன்றியமையாதது என்பதையும், அந்த வழிகாட்டுதலைப் புறக்கணித்துவிட்டு யாராலும் நல்லாட்சியைத் தரமுடியாது என்பதும் அவருக்கான திறந்த மடலில் விரிவாகச் சொல்லப்பட்டது. பாரம்பர்யமிக்க ‘கல்கி’ இதழ் தன்னுடைய வழக்கமான நல்லிணக்கப் பாதையைவிட்டு வழுவி, முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையில், முஸ்லிம்களைக் கடுமையாகத் தாக்கி ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. அதில் ‘கல்கி’ சொல்லியுள்ள கருத்துகள் அனைத்தும் வகுப்புவாத சிந்தனை கொண்டவை என்பதை எடுத்துரைக்கவும், இந்திய முஸ்லிம்களின் நிலையையும் உணர்வுகளையும் ‘கல்கி’ இதழுக்குப் புரிய வைக்கவும் எழுதப்பட்டதுதான் ‘அன்புள்ள கல்கி ஆசிரியருக்கு..!’ இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்று உலகமே பாராட்டும் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் உயர்ந்துநின்றபோது, ஆஸ்கர் விருதுகளையும் தாண்டிய, மிக மிக உன்னதமான ஒரு விருது குறித்து அவருக்கு நினைவூட்டு-வதற்காக வரையப்பட்டது-தான் ‘அன்புள்ள ரஹ்மான்..!’ இசைவழியில் பயணித்து இம்மையின் சிகரங்களைத் தொட்டுவிட்ட அவருக்கு இறைவழியில் பயணித்து மறுமையின் வெற்றிகளையும் பெற வழிகாட்டுகிறது அந்தத் திறந்த மடல். இவ்வாறு இந்த ஆறு திறந்த மடல்களும் ஆறு வேறுபட்ட பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும் எந்த இடத்திலும் யாருடைய மனத்தையும் புண்படுத்தாமல், கண்ணியம் தவறாமல், இஸ்லாமிய வரம்புகளுக்கு உட்பட்டு, அதேசமயம் அறச்சீற்றமும் குறையாமல் விறுவிறுப்பாக எழுதப்பட்ட திறந்த மடல்கள் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். நம்முடைய செய்திகளை மற்றவர்களுக்கு எப்படிச் சொல்லவேண்டும் எனும் அழைப்பியல் அணுகுமுறையும் இதில் உண்டு. இந்தத் திறந்த மடல்கள் அனைத்தும் ‘சமரசம்’ இதழில் வெளியானவை. வெளியான கால கட்டங்களில் வாசகர்களின் ஒருமித்தப் பாராட்டுகளைப் பெற்றவை.
Reviews
Write Your Own Review

Only registered users can write reviews. Please, log in or register