About Us

IQRA Online Bookshop - About Us


IQRA website has been launched with a noble intention of persuading people amongst whom the reading lifestyles getting diminished gradually, with worth-reading books. It is an evolution of wonderful habit persisted among small circles of friends those days that to share good books, discuss and debate deeply on the concept of those books.

IQRA began to sell books with the help of social media at early stage but the IQRA ONLINE BOOKSHOP achieved to cover rapidly a huge number of readers. It is amazing to note that, more than five thousand readers bought variety of books according to their needs and IQRA retained pride to assist them.

As an exclusive assignment, we have been awarded by the Group Administrators of many Phases that to distribute books as prizes to those who won competitions and we have executed the task in an awesome manner.We have enough inventory of books that would meet to the requirement of those who ‘love and live for reading’ and those who are fresh in reading culture.

It is one of our principles to encourage people into reading manners. We wish all the children, women and people in the globe to pay interest in reading books and we will have pleasure in finding the books of their interest and serve them.

We, IQRA ONLINE BOOKSHOP favor with special discounts to those who do not get opportunities to visit the famous book exhibitions conducted in many major cities.

To wind up briefly, it is our noble goal that to initiate to set up ‘Library in each Home’.

We welcome you, value your purchase and wish you with ‘happy reading’.

- IOBS Team



அருகி வரும் புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கு உயிரூட்டி, தரமான நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நன்னோக்கோடு இணையதளமாக உருவெடுத்துள்ளது இக்றா. நண்பர்களுக்கிடையே புத்தகப் பரிமாறல், அது குறித்த கலந்துரையாடல், ஆழ்ந்த விவாதங்கள் என்று ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நிகழ்ந்து வந்த செயல்களின் பரிணாம வளர்ச்சியே இக்றா ஆன்லைன் புக்‌ஷாப்.

இக்றாவின் புத்தக விற்பனை சமூக ஊடகங்களின் துணையுடன்தான் முதலில் துவங்கியது. ஆனால் வெகு விரைவில் விரிவானதொரு வாசகர் வட்டத்தை ஈட்டியது இக்றா ஆன்லைன் புக்‌ஷாப். முதலாம் ஆண்டு ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் தாங்கள் விரும்பும் பல்வேறு வகையான நூல்களை இக்றா ஆன்லைனில் வாங்கிப் பயனுற்றனர். அவர்களுக்குச் சேவையாற்றும் பெருமையைப் பெற்றது இக்றா.

பல்வேறு தளங்கில் நடைபெறும் பலவகையான போட்டிகளுக்கு நூல்களைப் பரிசாக அறிவிப்பவர்கள், அதற்கான பொறுப்பை இக்றாவிடம் நம்பிக்கையுடன் அளிப்பதும் அதை இக்றா ஆன்லைன் திறம்பட நிறைவேற்றுவதும் எங்களது சேவையின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டு.

வாசிப்பை சுவாசமாகக் கொண்டவராயினும் சரி, வாசிப்பு அனுபவத்திற்குள் அடியெடுத்து வைப்பவராக இருந்தாலும் சரி, அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ற நூல்கள் எங்கள் வசம் உண்டு. ‘வாசகரின் ஊக்கம்’ எங்களது குறிக்கோள்களுள் ஒன்று. மாதர்கள், மாணவர்கள் என்று மாந்தர்கள் அனைத்துத் தரப்பினர் கரங்களிலும் நூல்கள் புழங்க வேண்டும், அவர்களுக்கான நூல்களைத் தேடித்தர வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்குச் செல்லும் வாய்ப்பற்ற வாசகர்களுக்கு அச்சமயம் சிறப்புத் தள்ளுபடி அளிக்கிறது இக்றா ஆன்லைன் புக்‌ஷாப்.

சுருக்கமாக ‘வீட்டிற்கு ஒரு நூலகம்’ உருவாக அடித்தளம் இடுவது எங்கள் தலையாயக் குறிக்கோள்.

வாருங்கள்! வாங்குங்கள்! வாசியுங்கள்!

- IOBS Team